மின்சார சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே அறிமுகம்
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இன்று மின்சாரத் சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் ராஜ் குமார் சிங் தாக்கல் செய்தார்.
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இன்று மின்சாரத் சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் ராஜ் குமார் சிங் தாக்கல் செய்தார்.
மத்திய அரசு மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆம்ஆத்மி, திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இருப்பினும் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மின்துறை அமைச்சர் ராஜ் குமார் சிங் மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவை இன்று தாக்கல் செய்தார். மசோதாவைத் தாக்கல் செய்ததும் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியாகின.. 24 பேர் 100 % மதிப்பெண் பெற்று முதலிடம்..
அவர் பேசுகையில் “ இந்த சட்டத்திருத்த மசோதா உறுதியாக மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரத்தையும், மாநில அரசுகளை பலவீனப்படுத்தும்” எனத் தெரிவி்த்தார்
அப்போது மக்களவைதுணைத் தலைவர் ராஜேந்திர அகர்வால்,தொடர்ந்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை பேச அனுமதிக்கவில்லை. இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்து மத்திய மின்துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் பேசுகையில் “ எந்தவிதமான காரணமும் இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழப்பம் விளைவிக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்
அப்போது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவைக்கு வந்தார். மின்துறை அமைச்சர் பேசுகையில் “ இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வாய்ப்பு இருக்கிறது. ஆதலால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குழப்பம் விளைவிக்க அவசியம் ஏதும் இல்லை” எனத் தெரிவித்தார்
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில் “ சத்தீஸ்கர், பஞ்சாப் அரசுகள் இந்த மசோதாவை நிராகரித்துள்ளன.இந்த நேரத்தில் இந்த மசோதாவை அறிமுகம் செய்ய அவசியம் என்ன” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த மசோதா குறித்து மத்திய மின்துறை அமைச்சர் ராஜ் குமார் பேசுகையில் “ இந்த மசோதா மக்களுக்கு ஆதரவானது, விவசாயிகளுக்கு ஆதரவானது” என்றார். இதையடுத்து, மசோதாவை தொடரந்து தாக்கல் செய்து பேசலாம் என்று அமைச்சருக்கு மக்களவைத் தலைவர் அனுமதியளித்தார்.