Asianet News TamilAsianet News Tamil

கிழக்கு லடாக்: சீனாவை எதிர்கொள்ள இந்தியா இன்னும் எந்தெந்த வகையில் மேம்பட வேண்டும்..?

இந்தியா - சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் சண்டை நடந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், சீனாவை எதிர்கொள்ள இந்தியா எந்தெந்த வகையில் மேம்பட வேண்டும் என்று ஓய்வுபெற்ற லெஃப்டினெண்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
 

retired lt gen syed ata hasnain explains how indian army should modernize to face china in eastern ladakh
Author
Chennai, First Published Jun 2, 2021, 2:00 PM IST

இந்தியா - சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் சண்டை நடந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், சீனாவை எதிர்கொள்ள இந்தியா எந்தெந்த வகையில் மேம்பட வேண்டும் என்று ஓய்வுபெற்ற லெஃப்டினெண்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன்  நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

இந்தியா - சீனா உறவில் கல்வான் கேம் சேஞ்சராக அமைந்தது. கடந்த ஆண்டு(2020) ஜூன் 15/16 தேதிகளில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இந்தியா தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றமான சூழல் உருவானது. பின்னர் இருதரப்பிலும் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இரு நாட்டு ராணுவங்களும் அங்கிருந்து விலகின. இந்தியா - சீனா இடையேயான இந்த மோதல், இருநாடுகளுக்கு இடையேயான தந்திரோபாய, செயல்பாட்டு, மூலோபாய களங்களை கடந்து, சர்வதேச புவிசார் அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

இந்தியா - சீனா இடையேயான உயர்மட்ட தோழமை பிரச்சாரத்தை கவிழ்க்க மற்றும் புறக்கணிப்பதற்காக, 2020 ஏப்ரல் - மே காலக்கட்டத்தில் இந்தியா கொரோனா  பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த காலத்தை பயன்படுத்தியது சீனா. எல்லையில் செயல் உத்தி சார்ந்த சில பகுதிகளை ஆக்கிரமித்த சீனா, அதன்மூலம் பாரம்பரியமாக இந்திய ராணுவம் ரோந்து செல்லும் பகுதிகளில் ரோந்தை தடுத்து மிரட்டியது. எந்தவொரு வழக்கமான பிரச்சார பாணி ஆபரேஷன்களுக்கும் சீன ராணுவத்தின் திறன் போதுமானதல்ல. 

கடந்த ஆண்டு ஜூன் 6ம் தேதி நடந்த ராணுவ உயர்மட்டத்திலான பேச்சுவார்த்தையில் இருதரப்பு ராணுவங்களும் விலகிக்கொள்வதாக முடிவெடுக்கப்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் கர்னல் பாபுவும் அவரது படையும், நவீன போர்க்களத்தில் இதுவரை கண்டிராத மேம்படுத்தப்பட்ட உயர்ரக ஆயுதங்களால் தாக்கப்பட்டது தெரியவந்தது. தாங்கள் எதற்கும் தயார் என்ற மெசேஜை மறைமுக சொல்வதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் அது. அந்த தாக்குதலுக்கு இந்தியாவும் ரியாக்ட் செய்ய, இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை குவித்தது.  இருதரப்பிலும் வெவ்வேறு மட்டத்திலான 11 கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

சீனாவின் ராணுவ தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீன ராணுவத்தின் ஆதிக்கம் நிறைந்த சுஷில்-மோல்டோ என்ற பகுதியை இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல், சீனாவின் அத்துமீறலை நிறுத்துவும், இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலிருந்து சீன ராணுவத்தை பேச்சுவார்த்தை மூலம் வெளியேற்றவும் உதவியது.

”போர் இல்லாமல் அமைதி இல்லை” என்ற அசாதாரண சூழல் நிலவுகிறது. கொரோனா பெருந்தொற்று, இந்தியா - சீனா எல்லை மோதலை விட அதிக கவனம் ஈர்த்துவிட்டது. அதனால்  இந்தியா - சீனா மோதலை பற்றி பேசப்படுவதில்லை என்பதற்காக அது முடிவுக்கு வந்துவிட்டதாக கருதமுடியாது. அதுகுறித்த அனைத்து அம்சங்களையும் ஆராய்வது அவசியம்.

கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கான நோக்கத்தை நாம் கண்டறியவில்லை. 1962ல் செயல்பட்டதை போலவே சீனா மீண்டும் ஏன் செயல்பட்டதை என்பதை கண்டறியாதது நமக்கு நஷ்டமே. இந்தியா உரிமை கோரும் பிரதான பகுதியை கைப்பற்றி, போருக்கு தூண்டும் அனைத்து செயல்பாடுகளையும் செய்துவிட்டு, பின்னர் பின் வாங்குவது அறிவார்ந்த ராணுவத்தின் செயல்பாடு அல்ல. ஆனால் சீனா அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது.

சீன உளவுத்துறையின் மூலோபாய பகுப்பாய்வு, அமெரிக்காவில் டிரம்ப்பின் வெற்றி, ஆஃப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் அமைதிப்படுத்தியது, சீனாவுக்கு எதிராக இந்தோ - பசிஃபிக் பகுதியில் வலுவான தளத்தை அமைப்பது விரைவில் நிஜமாகும் என்று சீனா நம்புவதற்கு வழிவகுத்தது. அமெரிக்காவின் நோக்கத்தை செயல்படுத்துவதற்கு அமெரிக்காவிற்கு இந்தியா தான் உற்றதுணையாக இருக்கும். 

சீனா கடற்பகுதிகளைத்தான் அதற்கான அபாயமாக உணர்கிறது. அமெரிக்க கடற்படை பசிஃபிக் பெருங்கடல் பகுதியில்  உள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவிற்கு இந்தியா ஒத்துழைப்பு கொடுத்தால், அது சீனாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். இந்திய எல்லை பகுதிகளில் நெருக்கடி கொடுப்பதன் மூலம், அமெரிக்காவுடனான இந்தியாவின் நெருக்கத்தை தடுக்க முடியும் என சீனா நம்பியதா? என்றால், அதற்கு எதிர்மறையாக சிந்தித்திருக்க வாய்ப்புள்ளது. சீனாவின் தெளிவற செயல்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்தலாம்; இந்த விஷயத்தில், அமெரிக்காவுடனான மூலோபாய உறவை மேம்படுத்துவதற்கான சீனாவின் உண்மையான செயல்பாடுகளை இந்தியா மதிப்பிடுவது கடினமாக இருக்கும். இந்த மதிப்பீடு செய்வதில் இந்தியா தொடக்க கட்டத்தில் தான் இருக்கிறது. இந்திய எல்லையில் மோதல் போக்கை மேற்கொள்வதில் சீனா பலவிதமான நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படுகிறது. இந்தியாவின் மற்ற அண்டைநாடுகளுடன் ராஜாங்க ரீதியான உறவுகளை மேம்படுத்திவருகிறது சீனா. 

பேச்சுவார்த்தையின் மூலம் சீன ராணுவத்தை வெளியேற்றியது தற்காலிக தீர்வுதான். தற்காலிகமாக ராணுவ மோதல் நிறுத்தப்பட்டிருக்கிறது. சீனா பொறுமையாக கண்காணித்துவருகிறது. சீனாவின் செயல்பாடுகளை பற்றி இந்தியா கவலைப்படவில்லை. ஆனால் திறனை பொறுத்தமட்டில், உண்மையாகவே இன்னும் இந்தியா மேம்பட வேண்டியிருக்கிறது. 

இந்தியாவின் தளவாட செயல்பாடுகள் கடந்த ஆண்டு சிறப்பாக இருந்தது. ஆனால் அதுவே போதுமானது என்று கூறமுடியாது. நேரடியான மோதலுக்கு கிழக்கு லடாக்கில் இந்தியா இன்னும் தயாராக இல்லை. சீனாவை எதிர்கொள்ள நவீன பாதுகாப்பு உட்கட்டமைப்பு அவசியம். வாழ்விடம், சாலைகள், ஸ்டோரேஜ் ஆகியவை முக்கியம் என்பதால் கடந்த ஆண்டு இதைப்பற்றி மட்டுமே பேசினோம். சீனா திபெத்தில் அதன் ராணுவ தளவாடங்களை வலுப்படுத்திவருகிறது. எனவே இந்தியாவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது அவசியம். தேவைப்பட்டால் தாக்குதல் நடத்தவும் தயாராக இருக்க வேண்டும். 

ராஜாங்க ரீதியிலானம் மேலும் சில அம்சங்களை அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன் என்று முடித்துள்ளார் ஓய்வுபெற்ற லெஃப்டினண்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன்.

Follow Us:
Download App:
  • android
  • ios