resuffle of central ministry
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பிரமாண்ட விழா கொண்டாட பாஜக மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதேவேளையில், மத்திய அமைச்சரவையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவும், தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆலோசனையில் கட்சி மற்றும் அமைச்சரவையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து, தீவிர கலந்தாலோசித்து வருவதாக டெல்லி வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மத்திய அமைச்சர்களாக உள்ள சிலரை, கட்சிப் பணியில் ஈடுபடுத்த, அமித் ஷா திட்டமிட்டுள்ளார். அவர்களின் பதவியில் வேறு சிலரை புதிய அமைச்சர்களாக நியமிக்க முடிவு செய்துள்ளார்.
அதே நேரத்தில், தமிழகத்தை பொறுத்தவரை தமிழிசை சவுந்தர்ராஜனின் பதவியும் சில நாட்களில் பறிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதையடுத்து, வானதி சீனிவாசன் மாநில தலைவர் பதவிக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், அதற்காக மூத்த நிர்வாகிகள் சிலர் பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிகிறது.
90 நாட்கள் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தமிழகம் வருவதற்கு தள்ளிப்போட்டதற்கு இதுவும் ஒரு காரணம் என தமிழக பாஜகவினர் சிலர், மறைமுகமாக கூறி வருகின்றனர்.
