Asianet News TamilAsianet News Tamil

how to block spam call: மொபைல் போனுக்கு வரும் மோசடி அழைப்புகள், போலி எஸ்எம்எஸ்களில் இருந்து விரைவில் விடுதலை

மொபைல் போனுக்கு வரும் ஸ்பாம் கால்(மோசடி அழைப்புகள்) மற்றும் மோசடிச் செய்திகள், போலிச் செய்திகளில் இருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வர இருக்கிறது.

Relief from spam calls and fraudulent SMS will soon be available
Author
First Published Sep 24, 2022, 10:36 AM IST

மொபைல் போனுக்கு வரும் ஸ்பாம் கால்(மோசடி அழைப்புகள்) மற்றும் மோசடிச் செய்திகள், போலிச் செய்திகளில் இருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வர இருக்கிறது.

இதன்படி மொபைல் போனுக்கு இதுபோன்று அழைப்புச் செய்யும்போதோ அல்லது எஸ்எம்எஸ் அனுப்பும்போதோ தங்களின் அடையாளத்தை குறிப்பிடுவதும், அதை தெரியுமாறு செய்வதும் கட்டாயமாக்கப்பட உள்ளது.

தங்கம் விலை மீண்டும் சரிவு! நகைப் பிரியர்கள் குழப்பம்: இன்றைய நிலவரம் என்ன?

இதன் மூலம் மொபைல்போன் பயன்பாட்டாளர்களுக்கு எந்தவிதமான எஸ்எம்எஸ் மற்றும் அழைப்புகள் வந்தாலும், அழைப்பவர்கள் யார் என்பதை கண்டறிய முடியும். 

இதற்கான வரைவு மசோதாவை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் இந்த வாரத் தொடக்கத்தில் வெளியிட்டு மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளது. இந்திய டெலிகிராப் சட்டம் 1885, தி வயர்லெஸ் டெலிகிராபி சட்டம் 1933, டெலிகிராப் வயர்ஸ் 1950 ஆகியவற்றில் திருத்தம் செய்து வரைவு மசோதாவை மக்களின் கருத்துக்காக வைத்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி ஸ்தம்பித்துவிட்டது: நாராயண மூர்த்தி வேதனை

இது குறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் நேற்று பேசுகையில் “ நான் ஒரு குறிப்பிட்ட வங்கியிலிருந்து பேசுகிறேன், உங்களின் வங்கிக்கணக்கு எண், ஆதார் எண் ஆகியவற்றை தாருங்கள், ஓடிபி எண் கொடுங்கள் என்று பல்வேறு அழைப்புகள் மக்களுக்கு வருவது குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். அதன் மூலம் பல மோசடிகளும் நடந்துள்ளன.

சில நேரங்களில் தெரியாத செல்போன்களில் இருந்து மக்களுக்கு மிரட்டல்கள்கூட வருவதுண்டு. இதிலிருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வகையிலும், சைபர் குற்றங்கள், மோசடிகளைக் குறைக்கும் வகையிலும் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. இதற்கான வரைவு மசோதாவையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

முத்ரா திட்டம் பயனற்றது! ரூ.3.73 லட்சத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுப்பிங்க? ப.சிதம்பரம் கேள்வி

செல்போன் பயன்படுத்துவோருக்கு இதுபோன்ற மோசடி அழைப்புகள் செல்போன் எண்ணில் இருந்து மட்டும் வருவதில்லை, லேண்ட்லைன் அழைப்புகளாகவும் வருகின்றன. வழக்கமான வாய்ஸ் கால், வாட்ஸ்அப் காலாகவும், ஜூம் கால், பேஸ்டைம் போன்றவற்றில் இருந்தும் வருகிறது. 

எந்த விதமான அழைப்புகள் வந்தாலும் செல்போன் பயன்படுத்துவோர் கால் செய்பவர்யார் என்பதை தெரிந்து கொள்ள உரிமை இருக்கிறது. ஒவ்வொரு பயன்பாட்டாளருக்கும் இந்த உரிமை இருக்கிறது. இந்த உரிமையை உறுதி செய்யவே சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது. சட்டத்திருத்தத்தின் நோக்கமே, பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புதான்” எனத் தெரிவித்தார்


 

Follow Us:
Download App:
  • android
  • ios