gold rate today: தங்கம் விலை மீண்டும் சரிவு! நகைப் பிரியர்கள் குழப்பம்: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை இந்த வாரம் முழுவதுமே கடும் ஊசலாட்டத்துடனே இருந்து வருகிறது. தங்கம் விலை கடந்த இரு நாட்களாக உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது

Gold price has decreased once more: check rate in chennai, kovai, vellore and trichy

தங்கம் விலை இந்த வாரம் முழுவதுமே கடும் ஊசலாட்டத்துடனே இருந்து வருகிறது. தங்கம் விலை கடந்த இரு நாட்களாக உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது

தங்கம் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாயும், சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

ஒரு நாளுக்கு 102 கோடி.! அதானி அண்ணண் சொத்து மதிப்பு இவ்வளவா? அடேங்கப்பா..! வாயைப்பிளக்கும் நெட்டிசன்கள் !

Gold price has decreased once more: check rate in chennai, kovai, vellore and trichy

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,670 ஆகவும், சவரன், ரூ.37,360 ஆகவும் இருந்தது. 

இந்நிலையில் சனிக்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ.4,650ஆக குறைந்தது. சவரனுக்கு ரூ.160 வீழ்ச்சி அடைந்து ரூ.37,200ஆக சரிந்துள்ளது. கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,650ஆக விற்கப்படுகிறது.

தங்கம் விலை இந்த வாரம் முழுவதும் கடும் ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது. இந்த வாரத்தில் 3 நாட்கள் விலை குறைந்த நிலையில் 2 நாளாக தங்கம் விலை உயர்ந்தது, இன்று மீண்டும் சரிந்துள்ளது. 

மகிந்திரா நிதி நிறுவனம் ஏஜென்டுகள் மூலம் கடனை வசூலிக்கத் தடை: ஆர்பிஐ அதிரடி

Gold price has decreased once more: check rate in chennai, kovai, vellore and trichy

இந்த வாரம் தொடங்கும் போது தங்கம் கிராம் ரூ.4,632 ஆக இருந்தது, இன்று கிராம் ரூ.4650 ஆக உயர்ந்துள்ளது. ஏறக்குறைய கிராமுக்கு ரூ.18 உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.144 அளவில் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை தங்கம் சவரன் ரூ.37,056 ஆக இருந்தது, இன்று சவரன் ரூ.37,200 ஆக இருக்கிறது. 

தங்கத்தின் விலை கடும் ஏற்ற இறக்கத்துடன் நகர்வதால் தங்க நகை வாங்குவோர் மத்தியி்ல் பெரும்குழப்பம் நிலவுகிறது. இன்று விலை குறையுமா என்ற எதிர்ப்புடனும், நாளை விலை அதிகரித்துவிட்டால் என்ன செய்வது என்ற எதிர்ப்பார்ப்புடனும் குழப்பத்துடனே நகைகளை வாங்கி வருவதாக நகைப்பிரியர்கள் தெரிவிக்கிறார்கள். 

Gold price has decreased once more: check rate in chennai, kovai, vellore and trichy

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி ஸ்தம்பித்துவிட்டது: நாராயண மூர்த்தி வேதனை

பெடரல் வங்கி வட்டி வீதஅறிவிப்பு வந்தபின் தங்கம் விலையில் நிலைத்தன்மையான போக்கு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து விலையில் ஊசலாட்டம் நிலவுகிறது. 

வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.61.50ஆகவும், கிலோவுக்கு ரூ.1000 சரிந்து, ரூ.61,500 ஆகவும் விற்கப்படுகிறது
 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios