Asianet News TamilAsianet News Tamil

சோத்துல கறி எங்கடா? சாப்பாட்டில் கறி இல்லாததால் போர்க்களமான திருமண வீடு - 8 பேருக்கு மண்டை உடைப்பு

திருமண வீட்டில் வழங்கப்பட்ட  உணவில் கறி துண்டு இல்லாத காரணத்தால் மணமகன் குடும்பத்தினருக்கும், மணமகள் குடும்பத்திற்கும் ஏற்பட்ட மோதலில் 8 பேருக்கு மண்டை உடைந்தது.

Relatives Of Bride And Groom Fight Over Fewer Mutton Pieces At A Wedding Party In Telangana vel
Author
First Published Aug 30, 2024, 4:02 PM IST | Last Updated Aug 30, 2024, 4:02 PM IST

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள நவிப்பேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் அசைவ விருந்து வழங்கப்பட்டுள்ளது. விருந்தில்  தங்களுக்கு வழங்கப்பட்ட உணவில் மட்டன் துண்டுகளும், எலும்பும் குறைவாக இருப்பதாக மணமகன் தரப்பினர் குற்றம் சாட்டி உள்ளனர். இது தொடர்பாக மணமகன் தரப்பினருக்கும், மணமகள் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி சண்டையாக மாறியது.

Pongal Gift 2025 : பொங்கல் பரிசாக ரூ 5000 கொடுக்குமா தமிழக அரசு.? மக்களுக்கு அடிக்குமா ஜாக்பாட்

சண்டை மோதலாக மாறி ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் கட்டைகள், கற்கள் ஆகியவற்றால் கடுமையாக தாக்கிக் கொண்டனர். அப்போது அவர்களில் பலர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தீவிர சண்டை ஏற்பட்டு நடை பெற்ற தாக்குதலில் எட்டு பேருக்கு மண்டை உடைந்தது.

ஓபிஎஸ்யின் தம்பியால் என் உயிருக்கு ஆபத்து.! எஸ்பியிடம் கதறிய தொழிலதிபர்

தகவல் அறிந்து அங்கு சென்ற காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி காயமடைந்தவர்களை நிஜாமாபாத் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எலும்பு துண்டுக்கு ஏற்பட்ட மோதல் தொடர்பாக 19 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.

திருமண விருந்து நிகழ்ச்சியில் எலும்பு துண்டுக்காக ஏற்பட்ட சண்டை மோதலாக மாறி எட்டு பேர் மண்டை உடைந்து 19 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பேசு பொருளாக மாறி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios