இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உயிரிழப்பும் எண்ணிக்கையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உயிரிழப்பும் எண்ணிக்கையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,42,91,917ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று ஒரே நாளில் 1,185 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,74,308ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,25,47,866 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும்1,18,302 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 15,69,743 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் நேற்று வரை 1,44,93,238 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,73,210 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 26 கோடியே 34 லட்சத்து 76 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதித்த முதல் மூன்று நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், 2வது இடத்தில் இந்தியாவும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.