ஜூன் மாதத்திற்கு பிறகு இந்தியாவை பொருளாதார மந்தநிலை தாக்கும்.. மத்திய அமைச்சர் நாராயண் ரானே தகவல்!
ஜூன் மாதத்திற்கு பிறகு இந்தியாவை பொருளாதார மந்தநிலை தாக்கும் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் நாராயண் ரானே.
ஜூன் மாதத்திற்குப் பிறகு உலகில் பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் நாராயண் ரானே.
உலகில் ஜூன் மாதத்திற்குப் பிறகு பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்தார். இது இந்திய மக்களை பாதிக்காத வகையில் மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
இதையும் படிங்க..குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய்.. ஸ்டாலின் ஸ்டைலில் பிரியங்கா காந்தி அறிவிப்பு! பெண்கள் குஷி!
தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் நாராயண் ரானே, உலகளாவிய மந்தநிலை உள்ளது. அது பல நாடுகளில் உள்ளது. ஜூன் மாதத்திற்குப் பிறகு மந்தநிலை இந்தியாவைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, பல்வேறு வளர்ந்த நாடுகள் மந்தநிலையை எதிர்கொள்வது உண்மைதான்.
ஜூன் மாதத்திற்குப் பிறகு மந்தநிலை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மந்தநிலை நாட்டின் குடிமக்களைத் தாக்காமல் இருக்க மத்தியமும் பிரதமர் மோடியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். நாராயண் ரானே மகாராஷ்டிராவின் புனேவில் இரண்டு நாள் G20 உள்கட்டமைப்பு பணிக்குழு (IWG) கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இப்பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய தொழில்களை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரானே அறிவித்தார். இரண்டு நாள் G20 IWG கூட்டத்தைத் தொடக்கிவைக்கும் போது புனேவின் வளமான பாரம்பரியத்தையும் அவர் எடுத்துரைத்தார். நீண்ட கால மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஜி20 கூட்டம் முக்கியமானது என்று ரானே வலியுறுத்தினார்.
இதையும் படிங்க..கடைசியாக கடவுளை சந்தித்துவிட்டேன்.! நெகிழ்ந்த எஸ்.எஸ் ராஜமௌலி.. யார் தெரியுமா அது.?
இதையும் படிங்க..நான் பைத்தியமா? Y பிரிவு பாதுகாப்பு போதாதா.? அண்ணாமலைக்கு சவால்விட்ட காயத்ரி ரகுராம்!