Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் வேகமாக பரவும் எலிக்காய்ச்சல் : என்னென்ன அறிகுறிகள்? நோயை எப்படி தடுப்பது?

கேரளாவில், எலிக்காய்ச்சல் பாதிப்பு சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவும், சுமார் 50,000 பேருக்கு மேல் இந்த காய்ச்சாலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Rat fever spreading rapidly in Kerala: What are the symptoms? How to prevent disease?
Author
First Published Jul 7, 2023, 11:54 AM IST

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் கடந்த சில மாநிலங்களில் கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனிடையே மழைக்காலம் வந்துவிட்டாலே பல உடல்நலப் பிகொண்டு வருகிறது. பருவகால காய்ச்சலைப் போலவே மழைக்காலத்தில் நீரால் பரவும் நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

அந்த வகையில், பூஞ்சை தொற்று, மழைக்காலத்தில் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் நீரால் பரவும் நோய்கள் உட்பட பல அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். டெங்கு மற்றும் மலேரியா இந்த காலகட்டத்தில் பரவலாக இருந்தாலும், இந்த ஆண்டு கேரளாவில் எலிக்காய்ச்சல் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகின்றன. கேரளாவில், எலிக்காய்ச்சல் பாதிப்பு சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவும், சுமார் 50,000 பேருக்கு மேல் இந்த காய்ச்சாலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இளைஞர்களிடையே அதிகரிக்கும் மாரடைப்பு.. இதய நோய்களைத் தடுக்க உதவும் ஆரோக்கியமான டிப்ஸ் இதோ..

லெப்டோஸ்பிரோசிஸ் என்று அழைக்கப்படும் எலிக்காய்ச்சல் நோய், விலங்குகளில் உருவாகும் ஒரு அசாதாரண பாக்டீரியா தொற்று ஆகும். இது பொதுவாக எலிகள், பண்ணை விலங்குகள் அல்லது நாய்கள் உள்ளிட்ட விலங்குகளின் மலம் மூலம் பரவுகிறது. ஆனால் எலிக்காய்ச்சல் நோய் உயிருக்கு ஆபத்தானது அல்ல.

எலி காய்ச்சலின் அறிகுறிகள்:

எலி காய்ச்சலுக்கு சில பொதுவான அறிகுறிகள் இருந்தாலும், சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம். 

  • குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி
  • வயிற்று வலி
  • தலைவலி
  • அதிக காய்ச்சல் மற்றும் தடிப்புகள்
  • மஞ்சள் காமாலை
  • கண்களின் நிறம் மாறுகிறது, பெரும்பாலும் சிவப்பு

எலிக்காய்ச்சல் எவ்வளவு காலம் நீடிக்கும்?

எலி காய்ச்சல் சில நாட்கள் முதல் இரண்டு வாரங்கள் வரை நீடிக்கலாம். எனினும் எலிக்காய்ச்சலுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில் எசிறுநீரக பாதிப்பு, மூளைக்காய்ச்சல், கல்லீரல் செயலிழப்பு, சுவாசக் கோளாறு மற்றும் மரணம் கூட ஏற்படலாம்.

டெங்கு, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் ஏராளமான நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதால் பாக்டீரியா தொற்றுகளும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில சுகாதார ஆணையத்தின் பரிந்துரையின்படி, மக்கள் சுய மருந்துகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மருத்துவ ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தண்ணீரால் பரவும் நோய்களைத் தவிர்க்க வழிகள்

குழாய் நீரைத் தவிர்க்கவும்:

பொது இடங்களில் குழாய் நீர் எளிதில் கிடைக்கிறது. எனினும் அசுத்தமான நீரின் வாய்ப்பைக் குறைக்க, உடனடியாக குழாய் நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கை சுகாதாரம்:

நல்ல கை சுகாதாரத்தை கடைபிடிப்பது முக்கியம். கழிவறையை பயன்படுத்துவதற்கு முன், சாப்பிடுவதற்கு அல்லது வெளியில் இருந்து திரும்புவதற்கு முன், உங்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தம் செய்ய வேண்டும்:

காய்கறிகள் மற்றும் பழங்களை பெரும்பாலும் வெதுவெதுப்பான உப்பு நீரில் கழுவி, அது சாப்பிடத் தயாராக இருப்பதாக நீங்கள் உணரும் வரை ஊற வைக்கவும்.

தூய்மையான சூழல்:

கொசுக்கள் பெருகும் இடங்களைத் தடுக்க சுத்தமான சூழலை பராமரிக்கவும். வீட்டின் அருகே நீர் தேங்குவதை தவிர்க்கவும். நடைப்பயணத்திலிருந்து திரும்பும்போது, வெளியே சென்று வீட்டுக்கு திரும்பும் போதுஉங்கள் கால்களை கழுவ வேண்டும்.

 

அதிக எடை கொண்டவர்களுக்கு இறப்பு ஆபத்து அதிகமா? புதிய ஆய்வில் தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios