என்னது ரசகுல்லா தீர்ந்துபோச்சா? கல்யாண வீட்டில் கலவரம்.. கைகலப்பில் 6 பேருக்கு காயம் - போலீசார் விசாரணை!
Agra : உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு திருமண விஷேசத்தில் வந்தவர்களுக்கு பரிமாற ரசகுல்லா தட்டுப்பாடு ஏற்பட்டது தொடர்பாக அந்த திருமண விழாவில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்ததாக போலீசார் நேற்று திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஷம்சாபாத் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர் என ஷம்சாபாத் காவல் நிலைய எஸ்ஹோ அனில் சர்மா தெரிவித்தார். "கடந்த ஞாயிற்றுக்கிழமை, ப்ரிஜ்பன் குஷ்வாஹா வீட்டில் ஒரு திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவில், ஒரு நபர் ரஸ்குல்லா பற்றாக்குறை குறித்து ஒரு கருத்தை பேசியுள்ளார்.
பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட ராம் ரஹீமுக்கு மீண்டும் 21 நாள் பரோல்!
சாதாரண ரசகுல்லா பிரச்னை உடனே பூதாகரமாக வெடிக்க, அது சண்டைக்கு வழிவகுத்தது, இந்த மோதலில் பகவான் தேவி, யோகேஷ், மனோஜ், கைலாஷ், தர்மேந்திரா மற்றும் பவன் ஆகியோர் காயமடைந்தனர், கடந்த ஆண்டு அக்டோபரில் எத்மத்பூரில் நடந்த திருமணத்தில் இனிப்பு தட்டுப்பாடு தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.
ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடு ஷோ! மலர் தூவி உற்சாக வரவேற்பு!
திருமண வீடுகளில் உறவினர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு உணவு உன்ன அமர உட்காரும்போது இது போன்ற பல பிரச்சனைகள் பல இடங்களில் ஏற்படுவதை நம்மால் பார்க்கமுடிகிறது.