Asianet News TamilAsianet News Tamil

ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடு ஷோ! மலர் தூவி உற்சாக வரவேற்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளனர்.

PM Modi holds roadshow in Bikaner in poll-bound Rajasthan sgb
Author
First Published Nov 20, 2023, 9:44 PM IST | Last Updated Nov 20, 2023, 9:44 PM IST

பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் திங்கள்கிழமை மாலை ரோடு ஷோவின் பங்கேற்றார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தபடி, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த ஊர்வலத்தின்போது மத்திய அமைச்சரும், பிகானீர் எம்.பி.யுமான அர்ஜுன் ராம் மேக்வாலும் பிரதமர் மோடியுடன் பயணம் செய்தார். ஜூனாகத்தில் இருந்து தொடங்கிய ரோடு ஷோவில் பிரதமர் மோடி வழி முழுவதும் இருந்த கூட்டத்தை நோக்கி கை அசைத்தபடி சென்றார்.

வினி ராமனையும் விட்டு வைக்காத வன்ம கும்பல்... மேக்ஸ்வெல் மனைவியை டார்கெட் செய்து மிரட்டல்!

அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடியின் வாகனத்தை பெண் ஒருவர் வழிமறித்து நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பிரதமரின் வாகனம் பயணித்த சாலைகளில் வழிநெடுகிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளனர்.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்கெனவே இரண்டு பேரணிகளில் பிரதமர் மோடி பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட ராம் ரஹீமுக்கு மீண்டும் 21 நாள் பரோல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios