Asianet News TamilAsianet News Tamil

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் ஏன்? ரணில் விக்கிரமசிங்க விளக்கம்!!

இலங்கையில் மக்கள் போராட்டத்தில் ஈடிபட்டுள்ள நிலையில் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது குறித்து அதிபர் ரனில் விக்கிரமசிங் விளக்கம் அளித்துள்ளார். 

ranil wickramasinghe explain about declaration of emergency in sri lanka
Author
Sri Lanka, First Published Jul 13, 2022, 4:34 PM IST

இலங்கையில் மக்கள் போராட்டத்தில் ஈடிபட்டுள்ள நிலையில் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது குறித்து அதிபர் ரனில் விக்கிரமசிங் விளக்கம் அளித்துள்ளார். ராஜபக்சே குடும்பத்தினரின் தவறான கொள்கை முடிவுகளால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பட்டினி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து இலங்கையில் கடந்த மே மாதம் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது கலவரமாக மாறியது. ராஜபக்சே குடும்பத்தினர் அரசு பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் என்று நாட்டின் அனைத்து துறை மக்களும் கோஷம் எழுப்பினர்.

இந்த போராட்டம் வலுத்த நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருக்கு பதில் ரனில் விக்கிரமசிங்கே புதிய பிரதமராக பதவி வகித்தார். ஆனால், அவரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தவறியதாகவும், அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த மக்கள், அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

இதையும் படிங்க: ராஜினாமா செய்யாமல் தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே; அடுத்தது பார்லிமென்ட் முற்றுகையா?

ranil wickramasinghe explain about declaration of emergency in sri lanka

இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் வகையில் இலங்கை அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர். இலங்கையில் வரும் 20 ஆம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று பதவி விலகுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிபர் பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு நடைபெறும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைனிடையே கோட்டபய ராஜபக்ச, சிறப்பு விமானப்படை விமானம் மூலம் இன்று அதிகாலை மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றார். கொழும்புவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் கோட்டபய ராஜபக்ச, அவரது மனைவி, மெய்க்காவலர் உள்ளிட்ட 4 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவியதா?

ranil wickramasinghe explain about declaration of emergency in sri lanka

அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமல் இலங்கையை விட்டு மாலத்தீவுகளுக்கு கோத்தபய ராஜபக்ச தப்பியோடிய நிலையில், இலங்கையில் போராட்டம் நீடித்து வருகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக கோரி அங்கு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை அடுத்து கண்ணீர் புகைக்குண்டு உள்ளிட்டவைகளை வீசி போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக, இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், அங்கே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது குறித்து  ரனில் விக்கிரமசிங்கே விளக்கம் அளித்துள்ளார். இதுக்குறித்டுத்து அவர் பேசுகையில், இலங்கையில் மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.   

Follow Us:
Download App:
  • android
  • ios