Asianet News TamilAsianet News Tamil

ரஃபேல் விவகாரத்தில் அடுத்த துருப்புச்சீட்டு! ரகளை செய்ய ராகுல் ரெடி, என்ன செய்யப்போகிறார் மோடி?

நமோ அரசின் ‘மிஸ்டர் க்ளீன் கவர்மெண்ட்’ எனும் முத்திரையின் கழுத்தை மூர்க்கத்தனமாக முறித்து வருகிறது ரஃபேல் விவகாரம். ’பப்பு’ என்று பி.ஜே.பி.யினரால் லூல்லூலாயியாய் நக்கலடிக்கப்பட்ட ராகுல் காந்தி, தூக்கத்திலும் கூட இந்த விவகாரத்தை எடுத்து வைத்து எக்கச்சக்கமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார். 

rambal issue next evidence is redy
Author
Chennai, First Published Oct 17, 2018, 8:16 PM IST

நமோ அரசின் ‘மிஸ்டர் க்ளீன் கவர்மெண்ட்’ எனும் முத்திரையின் கழுத்தை மூர்க்கத்தனமாக முறித்து வருகிறது ரஃபேல் விவகாரம். ’பப்பு’ என்று பி.ஜே.பி.யினரால் லூல்லூலாயியாய் நக்கலடிக்கப்பட்ட ராகுல் காந்தி, தூக்கத்திலும் கூட இந்த விவகாரத்தை எடுத்து வைத்து எக்கச்சக்கமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார். எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி & கோவை வீழ்த்திட  இந்த ஒரு துருப்புச்சீட்டே போதும்! என்கிறார் ராகுல். 

இந்நிலையில் காங்கிரஸ் டீம் கலகலப்பாகுமளவுக்கு ஒரு தகவல் தடதடக்கிறது. அந்த தகவலை மிக முழுதாக ஸ்கேன் செய்து, இன்ச் பை இன்ச் ஆக அலச வேண்டியது அவசியம். ஆனாலும் அந்த தரவு சொல்லும் தகவல் இதுதான்...

”அதாவது தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் சென்ற பிறகு டஸோ நிறுவனம் வெளியிடும் அறிக்கையில் ‘ரஃபேல் பிராஜெக்டில் ரிலையன்ஸுடன் ஒப்பந்தம் வெறும் பத்து சதவீதம்தான்.’ ஆனால் தனது 2016-2017 ஆண்டறிக்கையில் ரிலையன்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ள தகவலின் படி, ரஃபேல் ஒப்பந்தத்தில் ஐம்பது சதவீதம் பங்கு! என்பது தெளிவாய் இருக்கிறது. 

அப்படியானால் எது உண்மை! ஏதோ ஒன்று பொய் என்றால், அந்த பொய்க்கான காரணம் யார்? அதன் பின்புலம் என்ன?” என்பதுதான். ஆக மொத்தத்தில் ரஃபேல் விவகாரம் நமோ தரப்பின் தூக்கத்தைக் கெடுக்காமல் அடங்கவே அடங்காது போல. நீ அடிச்சு ஆடுங்க ராகுல் தம்பி!

Follow Us:
Download App:
  • android
  • ios