பாமகவில் தந்தை மகன் இடையேயான உட்கட்சி மோதல் அதிகரித்து வரும் நிலையில், ராமதாஸ் தனது பெயரை அன்புமணி பின்னால் பயன்படுத்தகூடாது என தெரிவித்துள்ளார் 

PMK internal conflict : பாமகவில் நாளுக்கு நாள் தந்தை மகன் இடையேயான உட்கட்சி மோதல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நிர்வாகிகள் எந்த பக்கம் செல்வது என தெரியாமல் தவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தேர்தல் ஆணையத்தில் தான் தான் பாமகவின் தலைவர் என கடிதம் கொடுத்துள்ளார். 

ஆனால் அன்புமணியோ பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி தான் தான் தலைவர் என கூறி வருகிறார். இந்த நிலையில் அன்புமணி ஒரு பக்கம் நிர்வாகிகளை சந்திக்க ஒவ்வொரு மாவட்டமாக சென்று வரும் நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராமதாஸும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில், தஞ்சாவூர் திருவாரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் பொதுக்குழு கூட்டம் கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பாமகவில் உட்கட்சி மோதல்

இந்த கூட்டத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜி.கே.மணி, கும்பகோணத்தில் 6 நகராட்சி உறுப்பினர்கள் பா.ம.க.வில் இருந்தனர். ஆனால் தற்போது நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பா.ம.க.வெற்றி பெற முடியவில்லை மிகப்பெரிய வருத்தம் உள்ளது. 

வருத்தத்தை போக்க கூடிய கடமை பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் மற்றும் இளைஞர்களுக்கும் பொதுமக்களின் கடமை என உணர வேண்டும். வருகிற 2026 சட்டமன்ற தேர்ததிலில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நாற்பது தொகுதிகளை பா.ம.க. வெற்றி பெற்றால் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் பலமும் பா.ம.க சக்தி மிக்கவர்களாக மாற்றி விடலாம் என தெரிவித்தார். தேர்தல் வேலைகளை மட்டும் செய்யுங்கள் மற்றதை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பார்த்து கொள்வார் என கூறினார்.

தனது பெயரை பயன்படுத்த அன்புமணிக்கு தடை

இதனை தொடர்ந்து பேசிய ராமதாஸ், தமிழகத்தில் மக்கள் மனநிறைவோடு வாழ முடியவில்லை அதனால் தான் தமிழகத்தில் பா.ம.க போராடி வருகிறது. 5 வயது குழந்தை போல் இருக்கீங்களே என்று ஒருவர் கேட்டார். அந்த குழந்தை தான் 3 வருடத்திற்கு முன்பு தலைவராக ஆக்கியது அந்த குழந்தைதான். என் பெயரை யாரும் பின்னால் போடக்கூடாது. இனிஸியல் போட்டுக்கொள்ளலாம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. ராமர் வனவாசம் போகும் பொழுது தசரத சக்கரவர்த்தி ஆணையிடுகிறார். 

16 வருடம் வனவாசம் செல்ல உத்தரவிடுகிறார். அதற்கு செந்தாமரை போன்ற ராமரின் முகம் இருந்ததை போன்று தற்போது உள்ளது. தற்போது என்ன சொல்கிறோம் செயல் தலைவராக இருங்கள், மக்களை சந்தியுங்கள், கிராம கிராம செல்லுங்கள் என்று தான் சொல்கிறோம் என்று தான் சொல்கிறோம் என ராமதாஸ் தெரிவித்தார்.