Asianet News TamilAsianet News Tamil

அயோத்தியில் ராம நவமி கொண்டாட்டங்கள்.. இன்று மதியம் ராமர் நெற்றியில் சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு..

ராமரின் பிறப்பை குறிக்கும் இந்த ராம நவமி முதன்முறையாக புதிய ராமர் கோயிலில் கொண்டாடப்பட உள்ளது.

Ram Navami celebrations begin in Ayodhya; 'Surya Tilak' of Ram Lalla at noon When & Where To Watch Rya
Author
First Published Apr 17, 2024, 9:30 AM IST

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் கடந்த ஜனவரி 22-ம் தேதி பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த கோவிலில் தினமும் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கோவில் ராம நவமி கொண்டாட்டத்திற்காக அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராமரின் பிறப்பை குறிக்கும் இந்த ராம நவமி முதன்முறையாக புதிய ராமர் கோயிலில் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு, பால ராமரின் 'சூரிய அபிஷேகம்' நிகழ்வு மிகவும் சிறப்புவாய்ந்தது. அதாவது இன்று மதிய நேரத்தில் சூரியனின் கதிர்கள் ராமர் சிலையின் நெற்றியில் விழும்.

ராம நவமியான இன்று அயோத்தியில் குழந்தை ராமருக்கு ‘சூரிய அபிஷேகம்’ அல்லது ‘சூரிய திலகம்’ என்ற அரிய  நிகழ்வு நடைபெறும். ராமரின் நெற்றியில் சூரியனின் கதிர்கள் விழும் நிகழ்வை காண பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

 

குழந்தை ராமருக்கு இன்று நண்பகலில் 'சூர்யா அபிஷேகம்' பரிசாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நிகழ்வின் மூலம் சூரியக் கதிர்கள் தொடர்ச்சியான ஆப்டிகல் கருவி மூலம் திசை திருப்பப்படும். சூரியக் கதிர்கள் ராமரின் நெற்றியில் பிரகாசிக்கும். அடுத்த நான்கு நிமிடங்களுக்கு 75 மில்லிமீட்டர்கள் வரை வட்ட வடிவில் திலகம் போல பால ராமரின் நெற்றியில் சூரிய ஒளி படும்..

அமர்நாத் யாத்திரை 2024 தேதிகள் அறிவிப்பு : எப்படி பதிவு செய்வது? தேவையான ஆவணங்கள் என்னென்ன?

" ராமர் சிலையின் நெற்றி மையத்தில் திலகத்தின் சரியான காலம் சுமார் மூன்று முதல் மூன்றரை நிமிடங்கள் ஆகும், இரண்டு நிமிடங்கள் முழு வெளிச்சம் இருக்கும்" என்று இந்த திட்டத்துடன் தொடர்புடைய CSIR-CBRI ரூர்க்கியின் விஞ்ஞானி டாக்டர் எஸ் கே பானிக்ராஹி கூறினார்.

இந்த சூழலில் ஏப்ரல் 19ஆம் தேதிக்கு பிறகு குழந்தை ராமரை தரிசனம் செய்ய சிறப்பு விருந்தினர்கள் அயோத்திக்குச் செல்ல வேண்டும் என்று ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏப்ரல் 16 மற்றும் 18 க்கு இடையில் ராமரின் தரிசனம் மற்றும் ஆரத்திக்கான அனைத்து சிறப்பு பாஸ் முன்பதிவுகளையும் கோயில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. ராமர் கோவிலுக்குள் நுழைய மற்ற பக்தர்கள் செல்லும் பாதையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ஸ்ரீ ராமர் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா கூறுகையில், “சூரிய திலகத்தின் போது, ராமர் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ராம நவமி கொண்டாட்டங்களைக் காட்டும் வகையில் கோயில் அறக்கட்டளையால் சுமார் 100 எல்இடிகளும், அரசாங்கத்தால் 50 எல்இடிகளும் வைக்கப்படுகின்றன. மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கொண்டாட்டங்களை பார்க்க முடியும்.

மீண்டும் பாஜக ஆட்சி... மோடி 3வது முறை பிரதமராக 64% பேர் விருப்பம்: புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள்

தரிசனத்தின் போது ஏற்படும் இடையூறு மற்றும் நேர விரயத்தைத் தவிர்க்க, பக்தர்கள் தங்கள் மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை கொண்டு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கான சேவை மையம் சுக்ரீவ் குயிலாவில் அறக்கட்டளையால் நிறுவப்பட்டுள்ளது. அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ராமர் கோவில் ராம நவமி கொண்டாட்டங்களை நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios