பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு வரும் திங்கள்கிழமை தொடங்க இருக்கும் நிலையில் மாநிலங்களவைக்கு கூடுதலாக 19மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு வரும் திங்கள்கிழமை தொடங்க இருக்கும் நிலையில் மாநிலங்களவைக்கு கூடுதலாக 19மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன
பட்ஜெட் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதன்பின் பொருளாதார ஆய்வறிக்கையும், அதன்பின் நிதிஅமைச்ர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அடுத்த ஒருவாரம் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.

5 மாநிலத் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்ல இருந்ததால்,முதல் அமர்வு முடிக்கப்பட்டது. 5 மாநிலத்தேர்தலில் 4மாநிலங்களில் பாஜகஆட்சியை மீண்டும் கைப்பற்றிய உற்சாகத்தில் 30 நாட்களுக்குப்பின் திங்கள்கிழமை 2-வது அமர்வு கூடுகிறது
கூடுதல் நேரம்
19 அமர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 6மணிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் கூடுதலாக ஒருமணிநேரம் அமரும்போது, மாநிலங்களவைக்கு64 மணிநேரம் 30 நிமிடங்கள் கிடைக்கும். இதன் மூலம் மக்களுக்கு தேவையான, முக்கியத்துவம்வாய்ந்த விவகாரங்களை எடுத்து விவாதிக்க உதவியாக இருக்கும்.

முதல் அமர்வு
மாநிலங்களவையில் 4 நாட்கள் தனிநபர் மசோதாவும், கேள்வி நேரம் ஒருமணிநேரமும் நடக்கும். அதன்பின் கேள்விநேரத்துக்கு பிந்தைய நேரம் அரை மணிநேரமாக இருந்தது ஒருமணிநேரமாக நடத்தப்பட்டு அரைமணிநேரம் இடைவேளை விடப்படும்.பட்ஜெட் கூட்டத்தின் முதல் பகுதியில் 10அமர்வுகள் நடந்து பிப்ரவரி 11ம்தேதிமுடிந்தது. அப்போது மாநிலங்களவையின் ஆக்கப்பூர்வம் என்பது 101.4% இருந்தது
குடியரசுத் தலைவர் உரைக்குப்பின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிபின் மாநிலங்களவை தொடர்ந்து 8 நாட்கள் எந்தவிதமான இடையூறுமின்றி நடந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்குப்பின் மாநிலங்களவை இதுபோல் தடையின்றி நடந்தது இதுவே முதல்முறை. இதற்குமுன் கடந்த 2019ம் ஆண்டு மழைக்காலக் கூட்டத்தொடரில் தொடர்ந்து 13 அமர்வுகள் தடையின்றி நடந்திருந்தது.
