ராஜஸ்தானில் டெய்லர் கொடூரமாக கொலை… காரணம் இதுதான்… மாநிலத்தில் உச்சக்கட்ட பதற்றம்!!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதற்காக டெய்லர் கண்னையா லால் என்பவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதற்காக டெய்லர் கண்னையா லால் என்பவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். உதய்பூரில் உள்ள கண்னையா லால் என்பவரின் கடைக்கு கத்தி மற்றும் வாளுடன் சென்ற சிலர் பட்டப்பகலில் கடைக்காரரை கொடூரமாக கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் துணிகளுக்கு அளவீடு செய்வதாக கூறி தையல் கடைக்கு வந்து கடைக்காரரை கொடூரமாக கொன்றதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் கண்ணையாலால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட கொலைகாரர்கள் தையல்காரரின் தலையை ஆயுதத்தால் கொடூரமாக வெட்டியது மட்டுமல்லாமல், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த சம்பவத்தால் உதய்பூர் முழுவதும் பரபரபான சூழல் காணப்படுகிறது.
இதையும் படிங்க: நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து… ராஜஸ்தான் டெய்லர் கொடூரமாக வெட்டி படுகொலை!!
இந்த நிலையில் இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், இது மிகவும் வருத்தமான சம்பவம். இது சிறிய சம்பவம் அல்ல, நடந்தது கற்பனைக்கு எட்டாதது. உதய்பூரில் இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை நான் கண்டிக்கிறேன். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு சோகமான மற்றும் வெட்கக்கேடான சம்பவம். இன்று நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: ராஜஸ்தான் டெய்லர் கொலை செய்யப்பட்ட விவகாரம்… ஐந்து மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது!!
பிரதமர் மற்றும் அமித் ஷா ஏன் இதுபற்றி பேசவில்லை? மக்கள் மத்தியில் பதற்றம் உள்ளது. இதுபோன்ற வன்முறைகள் நடக்காது என்று பிரதமர் பொதுமக்களிடம் உரையாற்ற வேண்டும். அனைத்து தரப்பினரும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தச் சம்பவத்தின் வீடியோவைப் பகிர்வதன் மூலம் சூழலைக் கெடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். வீடியோவைப் பகிர்வதன் மூலம் சமூகத்தில் வெறுப்பை பரப்பும் குற்றவாளியின் நோக்கம் வெற்றியடையும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.