நாட்டை பிரிக்க ஐடியா கொடுத்தது ராஜாஜிதான் காங்கிரஸ் மூத்த தலைவர் நட்வர் சிங் பரபரப்பு

நாட்டை பிரிக்கக் கூறி ஐடியா கொடுத்தது ராஜாஜிதான்என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நட்வர் சிங் தான் எழுதிய பொக்கிஷக் கடிதங்கள் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நட்வர் கடந்த 1966 முதல் 1971-  ஆண்டுவரை  வெளியுறவுத்துறையில் பணியாற்றினார். அதன்பின் 1980-களில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, ராஜீவ் காந்தியின் ஆட்சியில் மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

நட்வர் சிங் தனது பதவிக்காலத்தில் நண்பர்களுக்கும், வெளியுறவுத்துறையில் தூதராக பணியாற்றியபோது, தனது சக ஊழியர்களுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும்  எழுதிய கடிதங்களையும் ஒன்றாகத் திரட்டி புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதங்களை தொகுத்து பொக்கிஷக் கடிதங்கள் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். அது குறித்து மூத்த தலைவர் நட்வர் சிங் கூறியதாவது:
இந்திரா காந்தி தனது பதவிக்காலத்தில் இரு பெரும் தவறுகளைச் செய்துவிட்டார். ஒன்று கடந்த 1975-ம் ஆண்டில் நாட்டில் அவசரநிலையை கொண்டுவந்தது, 2-வதாக ப்ளூஸ்டார் ஆப்ரேஷனை பொற்கோயிலில் நடத்த அனுமதித்தது. 

இவை இரண்டும் அவர் மீதான வெறுப்பைப் பெற்றுத்தந்தது. இதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இந்திரா காந்தி மிகப்பெரிய, சக்திவாய்ந்த பிரதமராக திகழ்கிறார்.ராஜாகோபாலாச்சாரி என்னிடம் பல்வேறு விஷயங்களைத் தெரிவித்துள்ளார். ஒருமுறை என்னிடம் ராஜாகோபலாசாச்சாரி கூறுகையில், “ இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்ற ஐடியாவை மவுண்ட்பேட்டனுக்கு கொண்டு சென்றதே நான்தான், இப்போது இருக்கும் குழப்பத்தை தீர்க்க இந்தியாவைப் பிரிப்பதுதான் தீர்வு என்று நான் மவுண்ட்பேட்டனுக்கு அந்தச் சிந்தனையைவிதைத்தேன் என்றார்.

ஆனால், இந்தியாவைப் பிரிப்பதற்கு மகாத்மா காந்தி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.  நாங்கள் அனைவரும் இந்தியாவைப் பிரிப்பதற்கு ஆதரவாக இருந்தோம். ஒருகட்டத்தில் காந்தியும் எங்அப்போது காந்தி, எங்களிடம் கூறினார், நீங்கள் ஒப்புக்கொண்டால் நானும் உங்களுடன் வருகிறேன் என்று கூறிவிட்டு அடுத்த நாள் டெல்லியில் இருந்து புறப்பட்டுவிட்டார் என நட்வர் சிங் தெரிவித்தார்.