Asianet News TamilAsianet News Tamil

ஒடிசா ரயில் விபத்து: காணாமல் போன இன்ஜினியர்.! எல்லாமே பொய் - பதறிப்போய் விளக்கம் கொடுத்த நிர்வாகம்

பாலசோரில் வாடகை வீட்டில் வசித்து வந்த அந்த குறிப்பிட்ட  பொறியாளரிடம் கடந்த 16ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திடீரென இளநிலை ரயில்வே பொறியாளர் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

Railway official dismisses reports of staff absconding after Balasore accident
Author
First Published Jun 20, 2023, 2:54 PM IST

ஒடிசாவின், பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாகா நகர் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட கோர விபத்தில் இதுவரை 292 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த விபத்துக்கு ரயில்வே சிக்னல் கோளாறே முக்கிய காரணம் என்று இந்த வழக்கின் விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இது குறித்த விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ள நிலையில் ரயில்வே இளநிலை பொறியாளர் ஒருவர் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Railway official dismisses reports of staff absconding after Balasore accident

பாலசோரில் வாடகை வீட்டில் வசித்து வந்த அந்த குறிப்பிட்ட  பொறியாளரிடம் கடந்த 16ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பின்னரே அவர் குடும்பத்துடன் காணாமல் போயுள்ளார். இந்த தலைமறைவையடுத்து இளநிலை ரயில்வே பொறியாளர் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். 

ஜிஇ ஆன இளநிலை ரயில்வே பொறியாளர் குடும்பத்தோடு காணாமல் போய்விட்டார் என்று செய்தி வெளியான நிலையில், தற்போது அந்த தகவலில் உண்மையில்லை என்று மறுப்பு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள தென்கிழக்கு ரயில்வேயின் CPRO ஆதித்ய குமார் சவுத்ரி, “ஊழியர் ஒருவர் தலைமறைவாகி இருப்பதாகவும், காணவில்லை என்றும் சில ஊடகச் செய்திகள் வருகின்றன. இது உண்மையில் தவறானது. மொத்த ஊழியர்களும் ஆஜராகி உள்ளனர்.அவர்கள் ஏஜென்சியின் முன் ஆஜராகி வருகின்றனர்” என்று கூறி விளக்கம் அளித்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: பாலசோர் ஸ்டேஷன் சிக்னல் ஜே.இயின் வீட்டிற்கு சீல் வைத்த சிபிஐ.. குற்றவாளி இவர்தானா.!

மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்.. சுற்றுலா பயணிகள் கதி என்ன.? பரபரப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios