மத்திய அரசின் நிதியில் இருந்து ரெயில்வே துறைக்கு 55 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரெயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் 

1. ரெயில்வே துறைக்கு ரூ.55 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

2. ரெயில்வே பாதுகாப்பு நிதி என்ற பெயரில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. ஒரு லட்சம் கோடி திரட்டப்படும். 


3. ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, இனி சேவைக் கட்டணம் வசூலிக்கப்படாது. 

4. நாட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ரெயில்நிலையங்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றப்படும். அவர்களுக்கான நகரும் படிகட்டுகள், மின்தூக்கிகள் உருவாக்கப்படும். 

5. ஆன்மீகச் சுற்றுலா செல்பவர்கள், சுற்றுலா செல்பவர்களுக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். 

6. புதிய மெட்ரோ ரெயில் கொள்கை உருவாக்கப்படும். இதன் மூலம் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். 



10. 3 ஆயிரத்து 500 கி.மீ தூரத்துக்கு நாடு முழுவதிலும் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும் 

11. 7 ஆயிரம் ரயில்களில் சூரிய ஒளி மின் திட்டம் செயல்படுத்தப்படும். 

12. மெட்ரோ ரயில் திட்டங்கள் தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும்.

13. ஐ.ஆர்.சி.டி.சி. மற்றும் ஐ.ஆர்.சி.ஓ.என். ஆகிய நிறுவனங்களை பங்குச்சந்தையில் பட்டியலிட நடவடிக்கை எடுக்கப்படும்.