raid in lallu daughter home

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ் மகள் மிசா பாரதியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

1991 முதல் 1993 வரை பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் லாலு பிரச்சாத் யாதவ். மேலும் 2006 ல் ரயில்வேத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

லாலுபிரசாத் முதலமைச்சராக இருந்தபோது மாட்டுதீவனம் வாங்கியதில் ஊழலில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டு சிறைக்கு சென்றார்.

பின்னர், ஜாமினில் வெளியே வந்த அவர் மீது பினாமி பெயரில் சொத்து சேர்த்ததாக குற்றசாட்டு எழுந்து புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து லாலுவுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி,பாட்னா, ராஞ்சி, புரி, குர்கான் உள்ளிட்ட 12 இடங்களில் தற்போது சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள அவரது மகள் மிசா பாரதியின் பண்ணை வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகின்ற்னர்.