rahul: modi:நண்பர்கள் சொல்லாததைக் கூட கேட்கும் பிரதமர் மோடி, மக்களின் பேச்சைக் கேட்பாரா: ராகுல் காந்தி விளாசல்
தனது நண்பர்கள் சொல்லாததைக்கூட கேட்கும் பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்ப பெறக் கோரி மக்கள் சொல்வதைக் கேட்டு திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
தனது நண்பர்கள் சொல்லாததைக்கூட கேட்கும் பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்ப பெறக் கோரி மக்கள் சொல்வதைக் கேட்டு திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், அரிசி, கோதுமை, மாவு வகைகள் தானியங்கள் ஆகியவை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்பட்டு 5 சதவீதம் வரிவிதிக்கப்பட்டன.
சாமானியமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்தை தொடர்ந்து 3வது நாளாக முடக்கியுள்ளனர்.
இந்தியாவின் மாம்பழ மனிதர் கலீம் உல்லா கான் ! ஒரே மாமரத்தில் 300 வகை மாம்பழங்கள்
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் “ நண்பர்கள் சொல்லாததைக் கூட கேட்கும் பிரதமர் மோடி, ஜிஎஸ்டி குறித்து மக்கள் கூறுவதைக் கேட்டு, வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
பணவீக்கத்தால் மக்கள் போராடி வரும்நிலையில், சாப்பிடுவதையே குறைத்து வருகிறார்கள். இந்த நேரத்தில் கப்பார் வரி உயர்வை உணவாக அளித்து வெற்று வார்த்தையுடன், பெருமூச்சுவிடுங்கள் என்று பட்டினியுடன் மனநிறைவடையுங்கள் என்று தெரிவிக்கிறார்.
மனஅழுத்தமின்றி விளையாடுங்கள்: காமென்வெல்த் விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
அத்தியாவசியப் பொருட்களி்ன் மீது வரியை உயர்த்தியது என்பது, அரசின் கொடூரமான ஒருபகுதிதான். இந்த வரி உயர்வு மேலும் பணவீக்கத்தை உயர்த்தவே செய்யும்”
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி, போராட்டம் ஆகியவற்றால் அச்சமடைந்த மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து விளக்கம் அளி்தார். அதில் பேக்கிங் செய்யப்பட்ட, பிராண்டட் உணவுப் பொருட்களுக்குத்தான் ஜிஎஸ்டி வரி. சில்லறையில் விறக்கப்படும் பொருட்களுக்கு வரியில்லை எனத் தெரிவித்தார்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி வரி குறைப்பு: கையைச் சுட்டுக்கொண்ட மத்திய அரசு: அம்பானிக்கு நிம்மதி
ஆனால், முதலில் அரசு குறிப்பிட்ட அரிசி, கோதுமை உள்ளிட்ட 14 வகை பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் போராட்டம், ஆர்ப்பாட்டம் எதிர்ப்பையடுத்து, மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.