rahul gandhi nepal congress:   காங்கிரஸ் கட்சியின் எம்.பி.ராகுல் காந்தி தனது நண்பரின் திருமணத்துக்குச் சென்றது குற்றமாக பாஜக சித்திரிக்கிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இல்லத் திருமணத்துக்கு அழையா விருந்தாளியாகச் சென்று ராகுல் காந்தி கேக் வெட்டவில்லையே என்று பிரதமர் மோடியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.ராகுல் காந்தி தனது நண்பரின் திருமணத்துக்குச் சென்றது குற்றமாக பாஜக சித்திரிக்கிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இல்லத் திருமணத்துக்கு அழையா விருந்தாளியாகச் சென்று ராகுல் காந்தி கேக் வெட்டவில்லையே என்று பிரதமர் மோடியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

பாஜக ட்விட்டர்

பாஜக தகவல்தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி நைட்கிளப்புக்கு சென்றது தொடர்பான வீடியோவை பகிர்ந்திருந்தார்.

Scroll to load tweet…

அதில் அவர் கூறுகையில் “ மும்பை நகரம் முழுவதும் கட்டுப்பாடான சூழல் இருந்தபோது, ராகுல் காந்தி நைட் கிளப்புக்குச் சென்றுள்ளார்.காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பமாக இருந்தநேரத்தில் அதைப் பொருட்படுத்தாமல் ராகுல் காந்தி நைட்கிளப்புக்குச் சென்றுள்ளார். நைட்கிளப்புக்குச் செல்வதை ராகுல் காந்தி வழக்கமாக வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சி தங்களின் தலைவர் பதவிக்கு வெளியிலிருந்து புதியநபரைக் கொண்டுவருவதற்கு மறுத்தவுடனே, பிரதமர் வேட்பாளருக்கான பணிகள் தொடங்கிவிட்டன ” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது குறித்த தெளிவானத் தகவல் இல்லை. இந்த வீடியோ நேபாளத்தில் உள்ள காத்மாண்டு நகரில் எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவித்தன

காங்கிரஸ் பதிலடி

பாஜகவின் விமர்சனத்துக்கு காங்கிகரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ ராகுல் காந்தி, தனது நண்பர் ஒருவரின் திருமணத்துக்காக நேபாளம் தலைநகர் காத்மாண்டுக்கு சென்றுள்ளார். அவருடன் இரு பாதுகாவலர்களும் சென்றுள்ளனர்.

அண்டை நாடான, நட்புநாடான நேபாளத்துக்குச் செல்வது குற்றம் இல்லையே. அங்கு சென்று நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதும் குற்றமில்லையே. பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மகளின் திருமணத்துக்கு அழையா விருந்தாளியாக திடீரென்று சென்று, அவருடன் சேர்ந்து கேக் வெட்டியதைவிட பெரிதான குற்றம் இல்லை.

ராகுல் காந்தி ஒன்றும் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடியைப் போல் அழையா விருந்தினரைப் போல் செல்லவில்லை. நவாஷ் ஷெரீப்புடன் சேர்ந்து ராகுல் காந்தி கேக் வெட்டவும் இல்லை. மோடி பாகிஸ்தான் சென்றுவந்தபின், பதான்கோட்டையில் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும்
ராகுல் காந்தி தனது நண்பர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க காத்மாண்டு சென்றுள்ளார்.

Scroll to load tweet…

இதில் தவறு ஏதும் இல்லை. இது கலாச்சாரம் சம்பந்தமானது. குற்றமில்லை. உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் திருமணத்தில் பங்கேற்பது குற்றம் என்று பிரதமர் அல்லது பாஜக வேண்டுமானால், குற்றம் என முடிவு செய்யலாம்” எனத் தெரிவித்தார்

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ராகுல் காந்தி தனது நண்பரின் திருமணத்தில் ப ங்கேற்தில் என்ன தவறு இருக்கிறது. ஏன் சங்கிகள் அவரைப் பார்த்து அச்சப்படுகிறார்கள். ஏன் சங்கிகள் பொய்களைப் பரப்புகிறார்கள். நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறோமே” எனத் தெரிவித்துள்ளார்.