தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தை முன்மாதிரியாக கொண்டு பெங்களூருவில், இந்திரா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை உணவகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த உணவகத்தை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.

ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியை போக்கும் வகையில்  தமிழகத்தில் அம்மா உணவகத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம்  தமிழகத்தில், உடலை வருத்தி ஒருவேளை பசியாற பாடுபடும் தொழிலாளர்கள், ஆதரவின்றி பசியால் வாடுபவர்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் என அனைவரின் பசியையும் போக்கி வருகிறது. 

இந்நிலையில், அம்மா உணவகத்தை முன்மாதிரியாக கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில், இந்திரா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை உணவகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. 

இதனை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். இந்த உணவகத்தில் 5 ரூபாய்க்கு சிற்றுண்டியும், 10 ரூபாய்க்கு சாப்பாடும் வழங்கப்படுகிறது. 

இந்த உணவகத்தை திறப்பதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. 198 இடங்களில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் கட்டமாக இன்று 101 இடங்களில் இந்திரா உணவகம் தொடங்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர்  சித்தராமய்யா தெரிவித்துள்ளார்.