ராகுலுக்கு 1 கோடி.. மோடிக்கு 4.85 கோடி..! தெரியுமா இந்த விஷயம் உங்களுக்கு..? 

சமுக வலைத்தளங்களில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என இவர்களை எல்லாம் பின்தொடரும் நபர்கள் ஏராளம். அந்த வகையில் ராகுல் காந்தி மற்றும் மோடியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை பார்க்கலாம்.

கடந்த 2015ம் ஆண்டு ராகுல் காந்தி ட்விட்டரில் இணைந்தார். கடந்த  நாடு ஆண்டுகளில் ஒரு கோடி பேர் பின் தொடர்கின்றனர். இது குறித்து தனது மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். 

அதில், என்னை ஒரு கோடி பேர் பின் தொடந்து உள்ளனர். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நேரத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த மகிழ்வை அமேதியில் கொண்டாட உள்ளேன். அந்த இடத்தில் காங்கிரஸ் தொண்டர்களையும், தனது ஆதரவாளர்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளேன் என ராகுல் தெரிவித்து உள்ளார்.

 

பிரதமர் நரேந்திர மோடி

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டுவிட்டரில் இணைந்த பிரதமர் மோடிக்கு தற்போது வரை 4 கோடிக்கும் அதிகமாக பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.