Russia Ukraine War: உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க ரஷ்யா உதவ வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடினிடம் தொலைப்பேசியில் பேசிய இந்திய பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க ரஷ்யா உதவ வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடினிடம் தொலைப்பேசியில் பேசிய இந்திய பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை காலை உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்தது. உக்ரைன் அரசு ஐரோப்பாவிற்கு நெருக்கமாகவும், நேட்டோ படைகளுக்கு நெருக்கமாகவும் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனை ரஷ்யா அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்கி வருகிறது.

முக்கியமாக மேற்கு உக்ரைன் பரப்பை குறி வைத்து ரஷ்யா தாக்கி வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, 6,60,000க்கும் அதிகமானோர் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அண்டை நாடான போலந்தில் மட்டும் 400,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்று இந்திய மாணவர் ஒருவர் இந்த தாக்குதலில் உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்திய அரசு அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது பற்றி ரஷ்ய அதிபர் புடினிடம் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைனின் கார்கிவ் நகரின் சூழ்நிலை குறித்து அதிபர் புதினிடம் பிரதமர் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க ரஷ்யா உதவ வேண்டும் என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடின், இந்தியர்களை மீட்க ரஷ்யா முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று பிரதமர் மோடியிடம் உறுதி அளித்துள்ளார்.