பஞ்சாப் பாநிலம் குரு கோபிந்த் சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் படுக்கை அசுத்தமாக இருப்பதாகக் கூறி அந்தப் படுக்கையில் ஹெல்த் சயின்ஸ் பாபா பரித் பல்கலைக்கழக துணை வேந்தரான டாக்டர் ராஜ் பஹதூரை படுக்க வைத்து அசிங்கப்படுத்திய மாநில சுகாதாரத்துறை அமைச்சரான சேட்டன் சிங் ஜோரமஜ்ராவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து ராஜ் பஹதூர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாப் பாநிலம் குரு கோபிந்த் சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் படுக்கை அசுத்தமாக இருப்பதாகக் கூறி அந்தப் படுக்கையில் ஹெல்த் சயின்ஸ் பாபா பரித் பல்கலைக்கழக துணை வேந்தரான டாக்டர் ராஜ் பஹதூரை படுக்க வைத்து அசிங்கப்படுத்திய மாநில சுகாதாரத்துறை அமைச்சரான சேட்டன் சிங் ஜோரமஜ்ராவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தனக்கு நேர்ந்த அவமானத்தை அடுத்து டாக்டர் ராஜ் பஹதூர் துணை வேந்தர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மருத்துவமனையின் படுக்கை சுகாதாரமற்ற முறையில் இருந்த நிலையில், ஒரு மருத்துவக் கல்லூரியின் துணைவேந்தர் என்றும் பார்க்காமல், கேவலாமாக நடத்தி இருக்கும் சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை அளித்துள்ளது. பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Scroll to load tweet…

நோயாளியின் படுக்கையில் படுக்க வைத்து அவமானப்படுத்தியதுடன், மற்ற அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் முன்பு திட்டி அசிங்கப்படுத்தி உள்ளார் அமைச்சர். ''இவை அனைத்தும் உங்கள் கையில்தான் இருக்கிறது. ஏன் படுக்கை இப்படி இருக்கிறது'' என்று அமைச்சர் சேட்டன் சிங் கேட்டுள்ளார்.

அடேங்கப்பா.. ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? இதோ முழு லிஸ்ட்!

டாக்டர் ராஜ் பஹதூருக்கு 71 வயதாகிறது. மிகவும் புகழ் பெற்ற முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணராக திகழ்ந்து வருகிறார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இருக்கும் மண்டல முதுகுதண்டுவட மையத்தின் இயக்குனராகவும், உறுப்பின செயலளராகவும் ராஜ் பஹதூர் இருந்து வருகிறார். மேலும், தேசிய மருத்துவ கமிஷனின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

Scroll to load tweet…

இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. சுகாதார அமைச்சரின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் ராஜா வேண்டுகோள் வைத்துள்ளார்.

Scroll to load tweet…