புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை விமானிகள் பாகிஸ்தான் கோட்டைக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சல்யூட் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை விமானிகள் பாகிஸ்தான் கோட்டைக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சல்யூட் தெரிவித்துள்ளார்.
கடந்த 14-ம் தேதி காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இதனையடுத்து இந்த தாக்குதலுக்கு எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி எச்சரித்திருந்தார். மேலும் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுவதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். 
இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாலாகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் இருந்து முகாம்களை விமானப்படை குறி வைத்து தகர்த்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், சுப்ரமணியன் சுவாமி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் ‘‘இந்திய விமானப்படை விமானிகளுக்கு ‘சல்யூட்’ (வீரவணக்கம்) என்று குறிப்பிட்டுள்ளார்.
