Asianet News TamilAsianet News Tamil

ஜூலை 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு... கடற்கரை, பூங்காங்களுக்கு செல்ல அனுமதி...!

 தற்போது மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூலை 15ம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 

Puducherry lockdown extended to july 31
Author
Puducherry, First Published Jun 30, 2021, 8:04 PM IST

புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தற்போது மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூலை 15ம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Puducherry lockdown extended to july 31

புதுச்சேரியில் பிறப்பிக்கப்பட்டுள்ள மேலும் சில தளர்வுகள் இதோ...

*கடற்கரை சாலை, பூங்காக்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* உடற்பயிற்சி, யோகா மையங்களில் 50% பேர் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்படும் , காய்கறி மற்றும் பழ கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

* அனைத்து தனியார் அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். (கொரோனா பரிசோதனை மற்றும் ஊழியர்களுக்கு 100 சதவீத தடுப்பூசி உறுதி செய்யப்பட வேண்டும்).

* அனைத்து சினிமா தியேட்டர்கள், மல்டிபிளெக்ஸ்களுக்கு ஊரடங்கில் விதிக்கப்பட்ட தடை தொடரும்.

* சமூக, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான கூட்டங்களுக்கு தடை.

* பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்த வழிகாட்டுதல்களின்படி அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும்.

* ஹோட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் மற்றும் முழுமையான உணவகங்களுக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் பார் வசதிகள் இரவு 9 மணி வரை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* சில்லறை மதுபானக் கடைகள் மட்டுமே காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

* திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புக்கு 100 நபர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.

* பெட்ரோல் பங்குகள், ஏடிஎம்கள், தொலைத்தொடர்பு, இணைய சேவைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இருக்காது.

*சரக்கு போக்குவரத்து எல்லா நேரங்களிலும் அனுமதிக்கப்படும் மற்றும் தனியார் / அரசு பொது போக்குவரத்து அனைத்து நாட்களிலும் 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* இரவு 9 மணி வரை அனைத்து மத வழிபாட்டுதலங்களும் பொது தரிசனத்திற்காக திறக்கப்படும். 100 பேர் திருமணத்தில் பங்கேற்கலாம், இறுதிச்சடங்கில் 20 பேர் பங்கேற்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios