Asianet News TamilAsianet News Tamil

தனியார்மயமாகும் மின்வாரியம்: ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

புதுச்சேரி மின்துறை தனியார் மயத்துக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் இன்று முதல் பணிகளை புறக்கணித்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் துவக்கியுள்ளனர். இதனால் மின்வாரிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Puducherry government floats tenders for privatisation of power distribution
Author
First Published Sep 28, 2022, 11:47 AM IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின்துறை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் புதுச்சேரி மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையே புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகும் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது தனியார் மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

பக்தர்களே மகிழ்ச்சி செய்தி !! திருப்பதி - திருமலை இடையே 10 பேட்டரி பேருந்து சேவை தொடக்கம்

இந்த நிலையில் மின்துறை தனியார் மயத்திற்கான டெண்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'புதுச்சேரி அரசு மின்துறை ஏலத்திற்கு ஆர்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், விநியோகத்தில் 100 சதவீத பங்குகளை வாங்க ஏலத்தாரர் தேர்வு செய்யப்படுவார்கள். முன்மொழிவுக்கான கோரிக்கைக்கு ஏலத்தாரர்கள் ரூ.5 லட்சத்து 90 ஆயிரம் செலுத்தவேண்டும். ஏலம் எடுக்கும் நிறுவனத்தின் வங்கி செக்யூரிட்டியாக ரூ.27 கோடி வங்கி கணக்கில் இருக்க வேண்டும். முன் மொழிவுக்கான கோரிக்கை வருகிற 30-ந் தேதி தொடங்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் மாதம் 25-ந் தேதி மாலை 4 மணி ஆகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய தில்லாலங்கடி திருநங்கை கைது

இதனால் அதிர்ச்சியடைந்த மின்துறை ஊழியர்கள் இன்று காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஈடுபட்டுள்ளனர். இன்று காலை உப்பளம் தலைமை அலுவலகத்தில் அனைத்து பொறியாளர்களும், தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து பணிகளை புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். அப்போது அவர்கள் உடனடியாக தனியார்மயத்தை கைவிட கோரியும், பொய் வாக்குறுதி கொடுத்த மின்துறை அமைச்சரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios