Asianet News TamilAsianet News Tamil

பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய தில்லாலங்கடி திருநங்கை கைது

மணப்பாறை அருகே கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்த திருநங்கையை கைது செய்த காவல் துறையினர் மணப்பாறை குற்றவியல் நீதித்துறை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Transgender Babitha rose arrested in money laundering case
Author
First Published Sep 28, 2022, 10:49 AM IST

விழுப்புரம் சந்தைபேட்டை கனகனந்தல் பகுதியில் வசித்து வந்தவர் பபிதா ரோஸ் (வயது 30). திருநங்கையான இவர் திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள அ.புதுப்பட்டியில் வீடு கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவரது வீட்டை புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கம்மாள தெருவைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரரான முருகேசன் என்பவர் ஒரு சதுர அடி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் வீடு கட்டித்தருவதாக ஒப்பந்தம் பேசியுள்ளார். அதன்படி வீடுகட்டிக்கொடுத்துள்ளதுடன் கூடுதலாக சுற்று சுவரும் கட்டி கொடுத்துள்ளார். மேலும் ஒப்பந்ததாரர் முருகேசனிடம், பபிதாரோஸ் ரூபாய் 10 லட்சம் கடனாகவும் வாங்கியுள்ளார்.

Modi Kabaddi League: ஒலிம்பிக்கில் கபாடி போட்டி இடம்பெறும் - அண்ணாமலை உறுதி

இந்நிலையில் தனக்கு வர வேண்டிய மொத்த பணம் 21 லட்சத்தை பபிதா ரோஸிடம் முருகேசன் கேட்ட போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு தகாத வார்த்தைகளால் வசை பாடியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட முருகேசன் இது தொடர்பாக வளநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான திருநங்கை பபிதா ரோசை தேடி வந்தனர். இந்நிலையில் துவரங்குறிச்சி ஆய்வாளர்ஜெய்சங்கர் தலைமையிலான காவல் துறையினர் நேற்று மாலை பபிதா ரோசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பபிதாரோஸ் மணப்பாறை குற்றவியல் நீதித்துறை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சினிமா பாணியில் தப்பிக்க முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்.. சென்னையில் பயங்கரம்..!

கைது செய்யப்பட்டுள்ள பபிதாரோஸ் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக ஏற்கனவே பல புகார்கள் உள்ளத்துடன், பலரையும் ஏமாற்றி பணம் பெற்றுகொண்டது உள்பட அடுக்கடுக்கான புகார்கள் நீண்டு கொண்டே சென்ற நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios