Asianet News TamilAsianet News Tamil

50வது பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக சீறி பாய்ந்தது..! வரலாற்று சாதனை படைத்தது இஸ்ரோ..!

 'ரீசாட்-2பிஆர்1' செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி வியின் 50 வது திட்டம் ஆகும். இதுவரையில் 49 முறை செயற்கோள்களை சுமந்து சென்றிருக்கும்  பி.எஸ்.எல்.வி அதில்  46 முறை வெற்றி பெற்றுள்ளது. 

pslv rocket launched from sriharikotta
Author
Sriharikota, First Published Dec 11, 2019, 3:29 PM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 'ரீசாட்-2பிஆர்1' என்னும் செயற்கைக்கோளை தயாரித்து இருக்கிறது. பூமியை கண்காணிப்பதற்காக தயாரிக்கப்பட்டு இருக்கும் இந்த செயற்கோள், பி.எஸ்.எல்.வி சி-48 ரக ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 செயற்கை கோல்களுடன் விண்ணில் சீறி பாய்ந்து சென்றது.

pslv rocket launched from sriharikotta

10 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்திருக்கும் பி.எஸ்.எல்.வி ராக்கெட் 628 கிலோ எடை கொண்டதாகும். விவசாயம், காடு வளர்ப்பு, பேரிடர் மேலாண்மை போன்றவை பற்றிய துல்லியமான தகவல்களை தருவதற்காக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 'ரீசாட்-2பிஆர்1' செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி வியின் 50 வது திட்டம் ஆகும். இதுவரையில் 49 முறை செயற்கோள்களை சுமந்து சென்றிருக்கும்  பி.எஸ்.எல்.வி அதில்  46 முறை வெற்றி பெற்றுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் 75 ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios