Asianet News TamilAsianet News Tamil

சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி 55 ராக்கெட்..

பிஎஸ்எல்வி-சி55 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

PSLV C55 rocket flew into space with 2 satellites of Singapore.
Author
First Published Apr 22, 2023, 2:40 PM IST

சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான TeLEOS-02 செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி சி-55 (PSLV-C55) ராக்கெட் மூலம் நாளை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.. இந்த பி.எஸ்.எல்.வி சி-55 செயற்கைக்கோள் இரண்டு சிங்கப்பூர் செயற்கைக்கோள்களுடன் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் உடன் ஒப்பந்தத்தின் கீழ் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.

750 கிலோ எடை கொண்ட இந்த TeLEOS-2 விண்கலம் ஹாட்ஸ்பாட் கண்காணிப்பு மற்றும் மூடுபனி மேலாண்மை, விமான விபத்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பலவற்றிற்குப் பயன்படுத்தக்கூடிய படங்களை வழங்கும். மேலும் இந்த செயற்கைக்கோள் ரேடார் மூலம் 1 மீட்டர் தெளிவுதிறனில் தரவுகளை வழங்கும் திறன் கொண்டது.. கடந்த பிப்ரவரி மாதம் இந்த செயற்கைக்கோள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது.. 

பிஎஸ்எல்வி புதிய ஒருங்கிணைப்பு வசதியில் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் ராக்கெட் என்ற பெருமையை பிஎஸ்எல்வி-சி55 பெற்றுள்ளது. அதாவது முந்தைய ராக்கெட் ஏவுதல் போல் இல்லாமல், ராக்கெட்டின் பல்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து புதிய முறையில் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் மூலம் குறைந்த நேரத்தில் அதிக பயணங்களை தொடங்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..

இந்நிலையில் பிஎஸ்எல்வி-சி55 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிற்பகல் 2:19 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இரண்டு செயற்கைக்கோள்களும் கிழக்கு நோக்கி குறைந்த சாய்வு சுற்றுப்பாதையில் ஏவப்பட்டது. TeLEOS-2 உடன், லுமிலைட் 4 என்ற சிறிய செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டது. 

 

இதையும் படிங்க : ஒருவழியாக வேட்புமனு ஏற்பு.. காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கோயிலில் சிறப்பு பூஜை

Follow Us:
Download App:
  • android
  • ios