இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 'ரீசாட்-2பிஆர்1' என்னும் செயற்கைக்கோளை தயாரித்து இருக்கிறது. பூமியை கண்காணிப்பதற்காக தயாரிக்கப்பட்டு இருக்கும் இந்த செயற்கோள், பி.எஸ்.எல்.வி சி-48 ரக ராக்கெட்டில் நாளை மாலை விண்ணில் ஏவப்பட்ட இருக்கிறது. இதற்கான 24 மணி நேர கவுண்டவுன் இன்று மாலை தொடங்கியது.

முன்னதாக இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய இன்று வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் நாளை மாலை பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட இருப்பதாக தெரிவித்தார். இஸ்ரோவிற்கு இது மிக முக்கியமான தருணம் என்று கூறிய அவர் 'ரீசாட்-2பிஆர்1' செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி வியின் 50 வது திட்டம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் 75 ராக்கெட் என்றார்.