Asianet News TamilAsianet News Tamil

களத்தில் மீண்டும் இஸ்ரோ: வரும் 25-ம் தேதி 14 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் ....

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வருகிற 25-ஆம் தேதி ராணுவ கண்காணிப்பு, எல்லைப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு உதவக்கூடிய கார்டோசாட்-3 செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்ப உள்ளது
.
 

PSLB C 47 racket isro
Author
Sriharikota, First Published Nov 20, 2019, 8:48 PM IST

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.அதிநவீன கார்டோசாட் செயற்கைக்கோள் மூன்றாம் தலைமைமுறையைச் சேர்ந்த அதிநவீனமானது. 

இதன் எடை ஆயிரத்து 625 கிலை. பூமியில் இருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட உள்ளது.

PSLB C 47 racket isro
பூமியை கண்காணிப்பதுடன் உயா் தரத்திலான புகைப் படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டதாகும். குறிப்பாக வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியை தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதோடு, இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாக படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது 

இந்த செயற்கைக்கோள். இது 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். ராணுவப் பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு ஆகியவற்றின் பயன்பாட்டுக்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது

PSLB C 47 racket isro

இது தவிர இந்த பிஎஸ்எல்வி-47 ராக்கெட்டில் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக்கோள்கும் விண்ணில் ஏவப்பட உள்ளன. ஒட்டுமொத்தமாக 14 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது

Follow Us:
Download App:
  • android
  • ios