இந்திய ராணுவத்தை வல்லமை பொருந்தியதாக மாற்ற இருக்கும் அருமையான திட்டங்கள்!!

எதிர்காலத்திற்கு ஏற்றவாறு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும்,  துரிதமான படையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்திய ராணுவம் திறன் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடுகளுக்கான தொழில்நுட்ப நன்மைகளைப் பயன்படுத்த பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

Projects to aim Indian army more lethal, digitalization and automation

மத்திய அரசாங்கம் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செயல்பாடுகள் மூலம் மத்திய அரசின்  லட்சியமான 'ஆத்மநிர்பர் பாரத்' துணையுடன் ராணுவத்தை டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் தானியங்கியாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

நடப்பில் இருக்கும் செயல்பாட்டு செயல்முறைகளை மறுவடிவமைத்தல், பொறியியல் ரீதியாக மறுவடிவமைத்தல், செயல்பாட்டுத் திறனில் கூடுதல் திறன் வெளிப்பாடுகளை கொண்டு வருதல் ஆகியவை மத்திய அரசின் திட்டங்களாக இருக்கிறது. ராணுவத்திற்கான சூழ்நிலை விழிப்புணர்வு, இயங்குதளம் அமைத்தல், ராணுவத்தின் சொந்த GAatishakti (AVAGAT)-யில் நாட்டம் செலுத்துதல், பீரங்கி போர் கட்டளை கட்டுப்பாடு மற்றும் தொடர்பு அமைப்பு, போர்க்கள கண்காணிப்பு அமைப்பு மற்றும் இந்திய ராணுவ தரவு களஞ்சியம் மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.

மணிப்பூரில் சட்டப்பிரிவு 355 அமல்; அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு நடவடிக்கை

சஞ்சய் திட்டம்:
இந்த திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையிலான சென்சார்களை ஒருங்கிணைதடு, பின்னர் இவற்றை அனைத்து மட்டங்களிலும் உள்ள ராணுவ கமாண்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அனுப்பும்.

இந்திய ராணுவம் கடந்த ஆண்டு சமவெளிகள், பாலைவனங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் விரிவான ஆய்வு மேற்கொண்டது. விரைவில் இந்த திட்டத்தை செயல்படுத்த ராணுவம் ஒப்பந்தத்தில் ஈடுபடும் என்று தெரிய வந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கள அமைப்புகளுக்கான அனைத்து வசதிகளையும் பெறும் என்று என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவ்காட் திட்டம்:
பிரதமரின் கதிசக்தியிடமிருந்து உத்வேகம் பெற்று, ஒரே ஜிஐஎஸ் தளத்தின் மூலம் பல டொமைன்களில்  விழிப்புணர்வைக் கொண்டுவரும் திட்டம் செயலாக்கத்தில் உள்ளது.

இந்த திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும், முதற்கட்டமாக அவகாட் என்ற திட்டத்திற்குள் அனைத்து வகையான அதாவது, லாஜிஸ்டிக் உள்ளீடுகள், செயற்கைக்கோள் தரவுகள், நிலப்பரப்பு மற்றும் அளவியல் உள்ளீடுகள் கொண்டு வரப்படும் என்று இந்திய ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது. ஒரு பொதுவான தளம் மற்றும் இந்த அமைப்பு ஆண்டு இறுதியில் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவத்திற்கான சூழ்நிலை விழிப்புணர்வு:
ராணுவத்திற்கான விழிப்புணர்வு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராணுவத்தில் அனைத்து சூழலிலும் இருக்கும் தளபதிகளுக்கு விரிவான போர்க்களத்தை படமாக வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லையில் கிழக்கில் கள ஆய்வுக்கு இந்த மாதம் இந்த திட்டம் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிய வந்துள்ளது. 

தன்பாலின ஈர்ப்பு ஒரு உளவியல் கோளாறு... சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டால் இன்னும் அதிகரிக்கும்: ஆர்எஸ்எஸ்

 இ-சிட்ரெப்:
இதன் மூலம் சூழலை விரைவாக புரிந்து கொள்ள தகவல்களை வழங்குதல், அதற்குத் தகுந்தவாறு செயல்திறனை அதிகரித்தல் ஆகும். ராணுவத்தில் இருப்பவர்களுக்கு குறிப்பான, சரியான தகவல்கள்  மட்டுமே எதிரிகளை எதிர்கொள்ள உதவும். இதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் இது. 

இந்த ஆண்டு ஜூன் முதல், ராணுவத்தில் இந்த திட்டம் செயல்படத் தொடங்கும். இந்த திட்டம் முதன் முதலாக ஜூன் மாதத்தில் ராணுவத்தின் வடக்கு அமைப்பில் செயல்படுத்தப்படும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios