தன்பாலின ஈர்ப்பு ஒரு உளவியல் கோளாறு... சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டால் இன்னும் அதிகரிக்கும்: ஆர்எஸ்எஸ்
"இதுபோன்ற திருமணங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான முடிவு நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கும் அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கும் பதிலாக சமூகத்தில் மேலும் சீர்குலைவை ஊக்குவிக்கும்" என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு கூறியுள்ளது.
பல மருத்துவர்களும் அதைச் சார்ந்த மருத்துவ நிபுணர்களும் ஓரினச்சேர்க்கை ஒரு "உளவியல் கோளாறு" என்றும், ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டால் அது சமூகத்தில் மேலும் அதிகரிக்கும் என்றும் ஆர்எஸ்எஸ் பெண்கள் பிரிவின் துணை அமைப்பான சம்வர்தினி நியாஸ் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) பெண்கள் பிரிவான ராஷ்ட்ர சேவிகா சமிதியின் மூத்த செயல்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், நாடு முழுவதும் நவீன அறிவியல் முதல் ஆயுர்வேதம் வரை எட்டு வெவ்வேறு சிகிச்சை முறைகளைச் சேர்ந்த மருத்துவர்களிடம் சேகரிக்கப்பட்ட 318 பதில்களின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும்
சம்வர்தினி நியாஸின் கருத்துப்படி, கிட்டத்தட்ட 70 சதவீத மருத்துவர்கள் ஓரினச்சேர்க்கை ஓர் உளவியல் கோளாறு என்றும் அவர்களில் 83 சதவீதம் பேர் ஓரினச்சேர்க்கை உறவுகளில் பாலியல் நோய் பரவுகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 57 சதவீதத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் தன்பாலின திருமணம் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை ஏற்கவில்லை என்றும் கருத்துக்கணிப்பு முடிவில் கூறப்பட்டுகிறது.
மணிப்பூர் கலவரத்தில் களவு போன ஆயுதங்கள்! திரும்ப ஒப்படைக்குமாறு காவல்துறை எச்சரிக்கை
"இதுபோன்ற திருமணங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான முடிவு நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கும் அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கும் பதிலாக சமூகத்தில் மேலும் சீர்குலைவை ஊக்குவிக்கும்" என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு கூறியுள்ளது.
"இதுபோன்ற உளவியல் கோளாறு உள்ள நோயாளிகளைக் குணப்படுத்த அவர்களுக்கு கவுன்சிலிங் நடத்துவதே சிறந்த வழி" என்று கூறப்பட்டுள்ளது. ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான கோரிக்கையில் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் பொதுமக்களின் கருத்தை எடுக்க வேண்டும் என்று சம்வர்தினி நியாஸின் கணக்கெடுப்பு பரிந்துரைக்கிறது.
"ஒரினச்சேர்க்கை பெற்றோர்கள் தங்கள் சந்ததிகளை சரியாக வளர்க்க முடியாது என்று 67 சதவீத டாக்டர்கள் பதிலளித்துள்ளனர்" என்று ராஷ்டிர சேவிகா சமிதியின் துணை அமைப்பு தெரிவிக்கிறது.
திகார் சிறையில் ரவுடி கொலையை வேடிக்கை பார்த்த தமிழ்நாடு போலீஸ்! அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சி!