மணிப்பூர் கலவரத்தில் களவு போன ஆயுதங்கள்! திரும்ப ஒப்படைக்குமாறு காவல்துறை எச்சரிக்கை
மணிப்பூரில் சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த கலவரத்தின்போது கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மெய்ட்டீஸ் சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது குறித்து கடந்த புதன்கிழமை கலவரம் நடந்தது. இதனையடுத்து இம்பால் மற்றும் பிற மாவட்டங்களில் 7,000 பேர் கொண்ட பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டது. இதனால் வெள்ளிக்கிழமை முதல் மெல்ல அமைதி திருப்பத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கலவரத்தின்போது இம்பாலின் கிழக்கின் பாங்கேயில் உள்ள மணிப்பூர் காவல்துறை பயிற்சிக் கல்லூரியின் ஆயுதக் களஞ்சியம் மற்றும் எட்டு காவல் நிலையங்களில் இருந்து ஆயுதங்கள் களவு போயிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் திருடிச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான ஆயுதங்களை கொள்ளையடித்தவர்கள் திருப்பி ஒப்படைக்குமாறு மணிப்பூர் டிஜிபி பி டவுங்கல் வலியுறுத்தி இருக்கிறார்.
யாரேனும் தானாக முன்வந்து ஆயுதங்களைத் திருப்பிக் கொடுத்தால், அவர்கள் மீது வழக்குத் தொடராமல் காப்பாற்றப்படுவார்கள் என்றும் மணிப்பூர் காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.
திகார் சிறையில் ரவுடி கொலையை வேடிக்கை பார்த்த தமிழ்நாடு போலீஸ்! அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சி!
வடகிழக்கு மாநிலத்தில் இணையத் தடை அமல்படுத்தப்பட்ட நிலையிலும் வதந்திகளால் வன்முறைச் சம்பவங்கள் தூண்டப்பட்டது. இதனால் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் வரவழைக்கப்பட்டது. இதனால் வியாழன் நள்ளிரவுக்குப் பிறகு சுராசந்த்பூர், காங்போக்பி, மோரே மற்றும் கக்ச்சிங் ஆகிய இடங்களில் எந்த பிரச்சனையும் இல்லை.
"கடந்த 12 மணி நேரத்தில், இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஆங்காங்கே தீ வைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனாலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது" என லெப்டினன்ட் கர்னல் எம் ராவத் கூறினார். வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 13,000க்கும் மேற்பட்ட பொதுமக்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளதாகவும் ராவத் கூறினார்.
ஆயுதப் படை தளங்கள் மற்றும் இராணுவப் படைகளின் இடங்களில் அவர்களுக்கு தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு எல்லை ரயில்வே மணிப்பூருக்கான இரண்டு ரயில்களை 48 மணிநேரத்திற்கு ரத்து செய்துள்ளது.
கர்நாடகாவில் அனுமன் ஆயுதம் பாஜகவுக்கு கை கொடுக்குமா? ஜன் கி பாத் - ஏசியாநெட் நியூஸ் சர்வே முடிவுகள்