அதிக ஒலி எழுப்பும் வெடிகள் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடி பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு தடைவிதித்து புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், பொது மக்கள்/பட்டாசு உற்பத்தியாளர்கள்/ பட்டாசு வியாபாரிகள் போன்றோர் பின்வரும் உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகள் கடைபிடிக்க மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
அதிக ஒலி எழுப்பும் வெடிகள் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் சர வெடிபட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. பட்டாசு விற்பனை, உரிமம் பெற்ற வணிகர்கள் மூலமாக மட்டுமே இருக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட இரசாயனங்கள் (permited chemicab) கொண்ட பட்டாசுகளை மட்டுமே அனைத்து மதப் பண்டிகைகளின்போதும் மற்றும் திருமணம் போன்ற பிற நிகழ்வுகளின் போதும் வாங்க /வைத்திருக்க / விற்க/ பயன்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பட்டாசுகளை உற்பத்தி செய்பவர்கள் அல்லது விற்பவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்.
நெருங்கும் தீபாவளி பண்டிகை… பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு… விதிமுறைகளை வெளியிட்டது காவல்துறை!!
பட்டாசுகளின் பயன்பாடு கண்டிப்பாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இருத்தல் வேண்டும். தீபாவளியன்று (24.10.2022) காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பொது மக்கள் பட்டாசு வெடிக்கலாம். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பாக வலியுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கபட்டுள்ளது
