இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ள ரயில்வேதுறை, முக்கியமான தடங்கள், தனியாருக்கு சாதகமாக இருக்கும் ரயில் பாதைகளை பட்டியலிட அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பா கடந்த 23-ம்தேதி ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில் 24 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  நகரங்களுக்கு இடையே செல்லும் இன்டர்சி்ட்டி, புறநகர் ரயில்கள், மற்றும் நீண்ட தொலைவு ரயி்ல்களில் தனியாருக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மண்டலத்தில் தங்கள் பகுதியில் எந்த வழித்தடத்தில் தனியாருக்கு வாய்ப்பளிக்க சாதகமானதக இருக்கும் என்பதை கண்டறிந்து 27-ம்ேததிக்குள் தெரவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கியமான வழித்தடங்களில் தனியாருக்கு வாய்ப்பளிக்கப்படும் பட்சத்தில் அந்த வழித்தடங்கள் ஏலம் விடப்்பட்டு,இரவு அல்லது பகல்நேரத்தில் முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் ரயில்கள் இயக்கப்படும்.

ஏற்கனவே டெல்லி-லக்னோ வழித்தடத்தில் தனியார் ரயில் அக்டோபர் 5-ம் தேதிமுதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில்முழுமையும் ரயில்வேயின் ஐஆர்சிடிசி மூலம் இயக்கப்படுகிறது. ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக ஐஆர்சிடிசி எனும் தனிவாரிய அமைப்பால் இயக்கப்படஉள்ளது.