Asianet News TamilAsianet News Tamil

சீனாவுக்கு ‘செக்’ வைக்கும் பிரதமர் மோடி - 2 நாள் பயணமாக இலங்கை சென்றார்

Prime Minister Narendra Modi visits 2 days srilanka
prime minister-narendra-modi-visits-2-days-srilanka
Author
First Published May 11, 2017, 9:52 PM IST


இலங்கையுடனான நட்புறவில் சீனா அதிக தீவிரம் காட்சி வரும் நிலையில், அந்நாட்டுக்கு பிரதமர் மோடி 2  நாட்கள் பயணம் மேற்கொண்டு கொழும்பு நகர் சென்றடைந்தார்.

இன்று நடைபெறும் புத்த பூர்ணிமா விழாவிலும், மருத்துவமனை திறப்புவிழாவிலும் பிரதமர் மோடி பங்ேகற்கிறார். கடந்த 2 ஆண்டுகளில் இலங்கைக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 2-வது பயணமாகும்.

புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று நண்பகலில் பிரதமர் மோடி இலங்கை புறப்பட்டார். கொழும்பு சர்வதேச விமானநிலையம் சென்று இறங்கிய மோடியை  இலங்கை பிரதமர்ரணில் விக்ரமசிங்கே, வௌியுறவு துறை அமைச்சர் மங்கள சமரவீரா உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதன்பின், விமானநிலையத்தில் இலங்கை விமானப்படையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

இலங்கையுடன் சீனா மிகுந்த நட்புறவு பாராட்டி வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே இலங்கையில் உள்ள ஹம்பன்டோட்டாதுறைமுகத்தை சீர்படுத்தும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது. அங்கு தன்னுடைய நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்தும் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொழும்பு நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெறும் புத்த பூர்ணிமா விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதன்பின், ரூ.150 கோடி மதிப்பில் இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள டிக்கோயா மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

மேலும், கண்டி பகுதியில் தமிழர்கள் வாழும் பகுதிக்கு செல்லும் பிரதமர் மோடி அவர்களுடன் உரையாடுகிறார். இந்த பயணத்தின் போது, இலங்கை மீனவர்கள், தமிழகமீனவர்கள் இடையே நீண்டகாலமா நீடிக்கும் பிரச்சினை குறித்தும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது குறித்தும் பிரதமர் மோடி, அந்நாட்டு  பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயுடன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

பிரதமர் மோடியின் பயணம் குறித்து டுவிட்டரில் இலங்கை பிரதமர்ரணில் விக்ரமசிங்கே வௌியிட்ட பதவில், “ சர்வதேச புத்தபூர்ணிமா விழாவை இலங்கை பெருமையுடன் கொண்டாடுகிறது. இதில் பங்கேற்று பெருமைசேர்க்க வந்துள்ள பிரதமர் மோடியை இலங்கை அரசு கனிந்த இதயத்துடன் வரவேற்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை புறப்படும் முன் பிரதமர் மோடி பேஸ்புக்கில் வௌியிட்டபதிவில் கூறியிருப்பதாவது-

 இலங்கைக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறேன். எனது இந்த பயணத்தில் கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச புத்தபூர்ணிமா கொண்டாட்டத்தில் பங்கேற்று புகழ்பெற்ற ஆன்மிகத் தலைவர்கள், அறிஞர்களைத் சந்தித்து உரையாட உள்ளேன். இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பது எனக்கு பெருமை அளிக்கிறது.

 கண்டியில் அமைந்துள்ள  தலதா மலிகாவில் மரியாதை செலுத்துகிறேன். இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா, பிரதமர்ரணில் விக்கிரமசிங்கே மற்றும் பிற பிரமுகர்களை சந்திக்கிறேன்.

இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள டிக்கோயாமருத்துவமனையை துவக்கிவைத்து அங்குள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் மக்களிடம் உரையாட உள்ளேன். இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios