உக்ரைன் ரஷ்யா போர் உச்சமடைந்து உள்ள நிலையில் பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறவேண்டும் என உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

நேட்டா அமைப்பில் உக்ரைன் இணையவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் போர்நிறத்தம் தொடர்பாக நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியை தழுவிய நிலையில், 18 வது நாளாக போர்தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

ரஷியாவின் படைகளை முன்னேற விடாமல் உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளனர். இதனால் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் தரப்பில் 1300 வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று தெரிவித்தார். இஸ்ரேல் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ரஷிய அதிபர் புதினுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். 

இதனிடையே போர் பதற்றம் காரணமாக, உக்ரைனிலிருந்து கிட்டதட்ட 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் உக்ரைனில் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களாக அங்கு குடியேறிய இந்தியர்களை காப்பாற்ற, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆப்ரேஷன் கங்கா எனும் திட்டத்தின் கீழ் அண்டை நாடுகளின் உதவியுடன் விமானம் மூலம் இந்தியர்கள் தாயகம் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

உக்ரைனின் சிக்கியிருந்த தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். போரின் விளைவாக கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ரஷ்யா மீதும், ரஷ்யா ஆதரவு தெரிவித்த பெலாரஸ் மீதும் மேலை நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளன.இதனால் உக்ரைன், ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் நிலவி வரும் மோதல் காரணமாக பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் , ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும் பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவது என்பது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தும் என்று பிரதமர் மோடி கூட்டத்தில் தெரிவித்தார்.மேலும் உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் சேகரப்பாவின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.மேலும் உக்ரைன் போரால் உலக அளவில் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

Scroll to load tweet…