Asianet News TamilAsianet News Tamil

PM Narendra Modi:எந்தப் பொருளாதாரச் சவால்களையும் இந்தியா சிறப்பாக சமாளிக்கும்: பிரதமர் மோடி பெருமிதம்

உலகப் பொருளாதாரத்தில் இந்தியா சிறந்த இடத்தில் இருக்கிறது என்று சர்வதேச செலவாணி நிதியம் தெரிவித்துள்ளது. எந்த பொருளாதாரச் சவால்களையும் சிறப்பாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்

Prime Minister Modi praises the country's solid macroeconomic fundamentals.
Author
First Published Jan 11, 2023, 1:16 PM IST

உலகப் பொருளாதாரத்தில் இந்தியா சிறந்த இடத்தில் இருக்கிறது என்று சர்வதேச செலவாணி நிதியம் தெரிவித்துள்ளது. எந்த பொருளாதாரச் சவால்களையும் சிறப்பாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்

மத்தியப்பிரதேச மாநிலம் சார்பில் 7-வது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டு இந்தூர் நகரில் இன்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: 

2023ல் உலக பொருளாதார மந்தநிலை வரக்கூடும்: உலக வங்கி எச்சரிக்கை

சர்வதேச செலாவணி நிதியத்தின் பார்வையில் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா சிறப்பான இடத்தில் இருக்கிறது. உலக வங்கியின் கருத்துப்படி, மற்றஎந்த நாடுகளையும்விட உலகப் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள இந்தியா சிறப்பான இடத்தில் இருக்கிறது என்று உலக வங்கி பாராட்டியுள்ளது.

இதற்கு காரணம் இந்தியாவில் அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைப்புகள் வலுவாக இருப்பதுதான். வலிமையான ஜனநாயகம், இளைஞர்கள் அதிகமாக இருப்பது, அரசியல் நிலைத்தன்மை போன்றவைதான் இந்தியா மீது சாதகமான கண்ணோட்டம் உருவாகக் காரணம். இந்தக் காரணிகளால், எளிதாக வாழ்தல், தொழில்செய்தலை ஊக்குவிக்க இந்தியா முடிவுகளை எடுத்து வருகிறது.

வளர்ந்த இந்தியா குறித்து பேசும்போது, நம்முடைய வெளிப்பாடு மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியரின் உறுதியான தீர்மானமாகும். 2014ம் ஆண்டிலிருந்து சீர்திருத்தம், மாற்றம், செயல்பாடு ஆகிய பாதையில் இந்தியா பயணித்து வருகிறது.

7 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா அடுத்த 7 ஆண்டுகளில் மாறும்: ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆத்மநிர்பார் பாரத் அபியான் சிறப்பான பங்களிப்பு செய்கிறது. இதன் விளைவு, இந்தியா சர்வதேச முதலீட்டை ஈர்க்கும் நாடாக மாறியுள்ளது. 

கடந்த 8ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலை கட்டமைக்கும் வேகத்தை இரட்டிப்பாக்கியுள்ளோம். இந்த காலக்கட்டத்தில்  விமானநிலையங்கள் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளன. இந்தியாவின் துறைமுக சரக்குகள் கையாளும் திறன், செயல்பாடு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு ஜி20 குழு நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை இந்தியா கொண்டுள்ளது என பொருளாதாரக்கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கானஅமைப்பு தெரிவித்துள்ளது.மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் கணிப்பின்படி,அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக மாறும்

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்


 

Follow Us:
Download App:
  • android
  • ios