ஜம்மு காஷ்மீர் சாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் அமர்நாத் யாத்ரீகர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நக்சலா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தலைகீழாக கவிழ்ந்த்து.

இதில், அமர்நாத் யாத்ரீகர்கள் 11 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைதொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

இதையடுத்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும், ஜம்மு காஷ்மீர் சாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.