செங்கோட்டையில் கொடியேற்றினர் மோடி…. புதிய இந்தியாவை உருவாக்க நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்…

நாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றினார்.

நாட்டின் 71வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி முப்டையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

இதனை தொடர்ந்து தேசிய கீதம், 21 குண்டுகள் முழங்க மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி. அதனை தொடர்ந்து அவர் உரையாற்றினார். அதில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

வரலாற்று மிக்க இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது. புதிய இந்தியாவினை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முன்னதாக காந்தி நினைவிடத்தில் பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.