இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமனம்... குடியரசு தலைவர் ஒப்புதல்!!
இந்தியாவில் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமித்து குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தியாவில் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமித்து குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் 49 ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் 8 ஆம் தேதியுடன் நிறைவுபெறுவதை அடுத்து புதிய தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என பரிந்துரைக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் கடந்த 7 ஆம் தேதி தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு கடிதம் எழுதியிருந்தது.
இதையும் படிங்க: ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களை காண புதிய வசதி... முழு விவரம் உள்ளே!!
அதனடிப்படையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூடை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை செய்துள்ளார். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமித்து குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்கவுள்ளார். நவம்பர் 9 ஆம் தேதி அவர் பதவியேற்பார் என்றும் அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொள்ளையனை தைரியமாக விரட்டியடித்த பெண் வங்கி மேலாளர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
மேலும் அவர் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் நீடிப்பார் என்று கூறப்படுகிறது. நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், 1998 இல் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். பின்னர் 2013 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், 2016 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.