ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களை காண புதிய வசதி... முழு விவரம் உள்ளே!!

ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களை கண்டறியவும் பயன்பாட்டில் இல்லாத மொபைல் எண்களை நீக்கவும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

new facility to view mobile numbers linked to aadhaar card

ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களை கண்டறியவும் பயன்பாட்டில் இல்லாத மொபைல் எண்களை நீக்கவும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அனைவருக்குமான அடையாள அட்டையாக ஆதார் அட்டை திகழ்ந்து வருகிறது. அடையாள சான்று, இருப்பிட சான்று என அனைத்திற்குமான ஆதாரமாக மாறியது ஆதார் அட்டை. மேலும் வங்கியில் புது கணக்கு தொடங்குவதில் இருந்து தற்போது போடும் கொரோனா தடுப்பூசி வரை அனைத்துக்கும் அடையாள ஆவணமாக மாறியிருக்கிறது ஆதார் அட்டை. இந்த நிலையில் ஆதார் எண்ணுடன் மொபைல் நம்பரை இணைக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: கொள்ளையனை தைரியமாக விரட்டியடித்த பெண் வங்கி மேலாளர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

அதன்பேரில் பலரும் தங்களது ஆதார் அட்டையும் அவர்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணையும் இணைத்துள்ளனர். ஆனால் தற்போது ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் பயன்படுத்தி வருவதால் அதில் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. அவர்கள் ஆதாருடன் இணைத்த எண்ணை காலப்போக்கில் உபயோகப்படுத்தாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். பின்னர் புதிய எண்ணை பயன்படுத்தும் போது அந்த எண்ணை இணைத்துக்கொள்கின்றனர். இவ்வாறு ஒரு ஆதார் அட்டையுடன் பல்வேறு மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் எத்தனை எண்கள் இணைக்கப்பட்டுள்ளது, பயன்படுத்தாத எண்ணை நிக்குவது உள்ளிட்ட வசதிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, TAFCOP என்ற இணையதளம் வழியாக அதை எளிதாக செய்யலாம். 

இதையும் படிங்க: அதானி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்த கேரளா அரசு - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வழிமுறை: 

  • https://tafcop.dgtelecom.gov.in/ என்ற இணையதளத்துக்குச் செல்லவும். 
  • அங்கு உங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்லிடப்பேசி எண்ணை உள்ளீடவும். 
  • பிறகு அந்த எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த எண்ணைப் பதிவுட்டு உள்ளே சென்றால், உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்லிடப்பேசி எண்களின் பட்டியல் கிடைக்கும். 
  • அதில் பயன்படுத்தாத மற்றும் உங்கள் செல்லிடப்பேசி எண் இல்லாத எண்களை நீங்கள் அகற்றவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • தேவையில்லாத மற்றும் உங்கள் செல்லிடப்பேசி எண்கள் அல்லாத எண்களை நீக்கி, ஆதார் எண் மற்றும் உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios