கேரளாவில் இடதுசாரி அரசு தங்களை விமர்சிக்கும் ஊடகங்களை வேட்டையாடுகிறது என்றுபாஜக எம்.பி. பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

கேரளாவில் இடதுசாரி அரசு தங்களை விமர்சிக்கும் ஊடகங்களை வேட்டையாடுகிறது என்றும் இதனால் மாநிலத்தில் அவசர நிலை போன்ற சூழல் நிலவி வருகிறது என்றும் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

கேரளாவில் ஆளும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு ஆட்சியை கடுமையாக விமர்சித்து பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

கேரளாவில் இடதுசாரி அரசு தங்களை விமர்சிக்கும் ஊடகங்களை வேட்டையாடுகிறது. மாநிலத்தில் அவசர நிலை போன்ற சூழல் நிலவுகிறது. இதை பாஜக கடுமையாக எதிர்க்கும். நாட்டில் காங்கிரஸ் கொண்டு வந்த அவசர நிலையை எதிர்த்து சி. பி.எம். ஆனால் இப்போது காங்கிரசை போலவே செய்கிறார்கள். பாட்னாவில் மீதி கூட்டம் இப்போது நடந்து வருகிறது. அவர்கள் கூட்டாளிகள். கேரள மக்களை ஏமாற்ற பகைமை காட்டி வருகின்றனர். இதை கேரள மக்கள் கண்டுகொள்வார்கள்.

ஸ்மார்ட் மீட்டரால் மின் கட்டணம் அதிகரிக்குமா? தமிழ்நாடு அரசு கொடுத்த விளக்கம் என்ன?

Scroll to load tweet…

அண்மையில், கேரளாவில் ஏசியாநெட் நிறுவனத்தின் தலைமைச் செய்தியாளர் அகிலா நந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மகாராஜா கல்லூரி மதிப்பெண் பட்டியல் முறைகேடு தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றதற்காக இடதுசாரி ஆதரவு பெற்ற இந்திய மாணவர் கூட்டமைப்பு மாநில செயலாளர் பி.எம்.ஆர்ஷோ அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

இதனை கண்டித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரேசகர், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் சித்தாந்தப் பேச்சு வெறும் பாசாங்கு. அதிலிருந்து அவர்களே முரண்படுகிறார்கள்" என்று சாடினார். ஏசியாநெட் செய்தியாளர் அகிலா நந்தகுமார் மீதான வழக்கை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி சமூக மற்றும் கலாச்சாரத் துறை பிரபலங்கள் பலர் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருப்பதும் நினைவுகூரத்தக்கது.

சிங்கப்பூர் வேலைக்குப் போறீங்களா? முதலில் இதைத் தெரிஞ்சு வைச்சுக்கோங்க!