வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் பாம்பு நடனத்தை விமர்சிக்கும் வகையில் நடிகை கஸ்தூரியும் பாம்பு டாஸ் ஆடி இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.

இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சுதந்திர கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இலங்கை நடந்தது. இந்த போட்டிகிளில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் பங்கேற்றன.

இலங்கைக்கு எதிராக முதல் போட்டியில் இந்தியா தோற்றாலும், தொடர்ந்து வங்கதேசத்தை இரு போட்டியிலும், இலங்கையை ஒரு போட்டியிலும் வென்று இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னெறியது. தொடர்ந்து வங்கதேச அணி இரண்டு முறை இலங்கை அணியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதி ஆட்டத்தின்போது, இலங்கையை வென்ற வங்கதேசத வீரர்கள், நாகினி டாஸ் ஆடினர்.

இந்த நிலையில், நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி பந்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸ் இந்திய அணிக்கு த்ரில் வெற்றியைப் பெற்றுத் தந்தது.

வங்கதேச வீரர்கள் இதற்கு முன் ஆடிய பாம்பு டான்சை விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், நடிகை கஸ்தூரியும் பாம்பு டான்ஸ் ஆடி, அந்த வீடியோ காட்சியை தனது டுவிட்டர் பகுதியில் வெளியிட்டுள்ளார். தற்போது, கஸ்தூரி வெளியிட்டுள்ள இந்த வீடியோம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.