பூஞ்ச் மாவட்டத்தில் மினி பஸ் கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு!!

ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் சஜியன் என்ற இடத்தில் மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். ராணுவத்தினர் தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

Poonch: Minibus accident in the Sawjian area 9 dead, army rescue operation underway

மினி பஸ்ஸில் பயணித்தவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் காயம் அடைந்துள்ளனர். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் உடனடியாக  மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் மீட்புப் பணியில் ராணுவத்தினர், போலீசார், அரசு நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் மக்களும் உதவி செய்து வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து மண்டல தாசிதார் தெரிவித்து இருக்கும் தகவலில், ''பூஞ்ச் மாவட்டத்தில் சஜிவன் என்ற இடத்தில் மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் தகவலுக்கு காத்திருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

பின்புறத்தில் செண்ட் பாட்டிலை சொருகிய நபர்… இயற்கை உபாதை கழிக்க முடியாமல் தவிப்பு… அடுத்து நடந்தது என்ன?

கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு வேட்டு வைக்கும் பாஜக; புதிய தகவலால் காங்கிரசில் பதற்றம்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios